மறந்துவிட்ட மாணிக்கமடு சிலை விவகாரம்; தேர்தல் வந்தால் மீண்டும் பேசப்படும்


பௌத்தர்கள் அல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாணிக்கமடு கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையில்  பௌத்த பிக்குகளினால்  புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை குறித்து பலதரப்புக்கள் பல கட்சிகள் குரல்களை எழுப்பியிருந்தது அனைவரும் அறிந்த விடயம்.
புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள மாணிக்கமடு வழியாக தங்களின் புனித தலமான தீகவாவிக்கு செல்லும் யாத்திரிகர்கள் நலன்கருதி மடமொன்றும் பௌத்த பிக்குகள் தங்குமிடமொன்றையும் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பௌத்த பிக்குகள் வலியுறுத்தியிருந்தார்கள்.
ஜனாதிபதி , பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கும் இந்த விடயத்தை முன் வைத்து தீர்வொன்றை காண்பது குறித்தும் தமிழ் - முஸ்லிம் தரப்பு கூடி முடிவு எடுத்துள்ளதாக அரசியல் வாதிகள் குறிப்பிட்டிருந்தனர். 
இன்று 18.10.2017 ம் திகதி வரை இந்த சிலை அகற்றப்படவில்லை, எல்லாமே பேச்சாகவும் ஊடக அறிக்கைகளாகவுமே முடிவுற்றுள்ளது, மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் அல்லது பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற சந்தர்ப்பம் வந்தால் இது துக்கிப்பிடுக்கப் படும், ஆனால் மக்கள் இருப்பு பிரச்சினைகள் ஒருபோதும் தீர்ந்து விடப்போவதில்லை.