தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து பேசும் ஹக்கீம் ஏன் வட்டமடுவை மீட்கவில்லை?முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் நேற்றைய அதிர்வில் தமிழர்களோடு ஒட்டி உறவாடுவதாக தன்னை அடையாளப்படுத்தியிருந்த போதிலும் நீண்ட நாட்களாக இருந்து வரும் வட்டமடு காணிப்பிரச்சினை தீர்க்க முயலவில்லை என்ற குற்றசாட்டு இருக்கிறது.

இது வன இலாகா மற்றும் முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சிரனை என்று பலராலும் பேசப்பட்டாலும் இங்கு இருப்பது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் பரம்பரை பகைப்பிரச்சினை இதனை சம்பந்தரும் ஹக்கீமும் இருந்து பேசுவதன் மூலமே தீர்க்கலாம்.

மாட்டு உரிமையாளர்களுக்கு மேய்ச்சல் தரை வேண்டும் காணியுரிமையாளர்களுக்கு வயல் செய்ய காணி வேண்டும் இது பொன்விளையும் பூமி, தயவு செய்து கனிந்திருக்கும் இந்த நல்லாட்சியில் இதனை செய்து தருமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர், இது செய்யப்படாத போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து இதனை தீர்த்து கொடுங்கள். இது முஸ்லிம்களின் வரலாறு சொல்லும் பிரதேசம்.