வெற்றிகரமான ஒரு ஊடக பிரசாரநடவடிக்கைக்கான கூறுகள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
வெற்றிகரமான ஒரு மக்கள் தொடர்பு பிரசாரநடவடிக்கையை மேற்கொள்ள முன்னர், சில அடிப்படை மக்கள் தொடர்பு சாதனங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். பின்வரும் மக்கள் தொடர்பு “திறமுறைகளில்” ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அது என்னவென்றும் அதனை எங்கு பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
• செய்தியாளர்களுக்கான சாதனப்பொதி
செய்தியாளர்களுக்கான ஊடக சாதனப்பொதி என்பது முக்கியமான quot;செய்திகளைக் கொண்ட தொகுப்பொன்றாகும் ” இதன் மூலமாக ஒரு செய்தியாளருக்கு உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் பற்றிய பின்னணி தகவல்கள் கிடைக்கும். பொதுவாக ஒரு அலுவலக கோப்புறையாக இது வழங்கப்படும் (உங்கள் நிறுவனம், அதன் இலட்சினையை வெளிப்புறத்தில் கொண்டதாக இருக்கலாம்). இதில் கீழே விவரிக்கப்பட்டதில் பல “தகவல்” திறமுறைகள் இருக்கலாம். இது ஒரு விற்பனை கைந்நூல் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அதாவது இவை பத்திரிகையாளர்கள் அவர்களின் கட்டுரைகளை எழுதுவதுவற்கு உண்மையில் உதவக்கூடியதாக இருக்கலாம்.
ஒரு ஊடக பிரசாரநடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ஊடக நேர்காணல்களில் கலந்து கொள்ள செல்லும்போது, மற்றும் உங்கள் நிறுவனத்தைப் பற்றி ஏதும் அறியாதவரிடம் பேசும் போதெல்லாம் உங்களிடம் ஒரு ஊடக சாதனப்பொதி தயார் நிலையில் இருத்தல் வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இற்றைப்படுத்தப்பட்ட ஊடக சாதனப்பொதியை நீங்கள் அனுப்ப வேண்டும், இதனால் உங்கள் நிறுவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய சரியான தகவல்களைப் பெறலாம். பயன்படுத்தும் நேரத்துக்கேற்ப உங்கள் ஊடக சாதனப்பொதியின் உள்ளடக்கங்கள் மாற வேண்டும். பொதுவாக, இதில் பின்வருபவற்றில் சில அல்லது அனைத்தும் காணப்படலாம்:
• அண்மைகால ஊடக வெளியீடுகள்
• உங்கள் நிறுவனத்தைப் பற்றிய பின்னணித் தகவல்கள்
• உங்கள் நிறுவனத்தைப் பற்றிய ஒரு பக்க விடய அட்டை
• உங்கள் உயர் அதிகாரிகளின் சுயசரிதைகள்
• உங்கள் உற்பத்திப்பொருட்களின் புகைப்படங்கள் (தலைப்புகளைச் சேர்க்க மறக்காதீர்கள்)
• உங்கள் உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள் (நேர்காணலின் போது மிகவும் அவசியம்)
• துல்லிய தயாரிப்பு அட்டைகள்/கைந்நூல்கள்
• தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களும் தொலைபேசி இலக்கங்களும்
 ஊடக வெளியீடுகள்
ஊடகங்களில் உங்களின் நிறுவனத்தைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கான அடிப்படை வழி ஊடக வெளியீடுகளாகும். செய்தியாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் செய்தி தயாரிப்பாளர்கள் ஆகியோர் செய்திகளைப் பெற ஆவலுடன் இருப்பார்கள். புதிய, வித்தியாசமான உற்பத்திப்பொருட்கள் மற்றும் நிறுவனங்கள், போக்குகள், தகவல் குறிப்புகள் மற்றும் பிற அபிவிருத்தி என்பன பற்றி அறிவதற்கு இந்த ஊடக வெளியீகளையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
• ஊடக விழிப்பு


பெயர் வெளிப்படுத்துவது போல், விசேட நிகழ்வுகள், செய்துகாண்பிப்புகள், அல்லது செய்தி மதிப்புமிக்க நிகழ்வு போன்ற ஊடக மாநாடொன்று பற்றி அறியப்படுத்த இந்த ஊடக விழிப்பு நடவடிக்கை பயன்படுகின்றது. இது ஊடகம் ஏன் அதில் கருசனையாக இருக்கும், என்ன நிகழும் என்பது பற்றிய ஓரிரு பக்க ஊடகச் செய்தியாகும். ” “. இதனை உங்கள் நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களை அழைக்கும் ஒரு வழியாகவும் கருதலாம். ஊடக விழிப்பு பயனுடையதாக இருக்கலாம் எனும் சில சந்தர்ப்பங்கள் இங்கு காணப்படுகின்றன.
• உங்கள் நிறுவனம் ஒரு வியாபார காட்சியை காண்பிக்கின்றது, ஒரு பிரபலமான நபர் அதில் கலந்து கொள்ள இருக்கிறார் எனும்போது
• ஒரு சிறப்பு தினத்துக்காக அதிகமான ஆரம்ப பாடசாலை மாணவர்கள் உங்கள் நிறுவனத்துக்கு வருகிறார்கள் எனில்
• ஊடக நேர்காணலை நடாத்தும் போது
• உங்கள் கடையில் ஒரு சிறப்பு விளக்கக்காட்சி நிகழும் போது
• உள்ளூர் அமைப்பு ஒன்றில் நீங்கள் முக்கிய உரையாற்றும்போது
• புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது
• உங்கள் நிறுவனம் ஒரு பொதுநல நிகழ்ச்சிக்கு நிதியளிக்கும்போது அல்லது ஒரு முக்கியமான நன்கொடை ஒன்றை வழங்கும்போது
உங்களுடைய ஊடக விழிப்பு நடவடிக்கையில் பின்வருவன உள்ளனவா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
• என்ன நிகழ்கிறது
• ஏன் அது முக்கியமானது
• அது எங்கு நிகழ்கிறது
• அது எப்போது நிகழும்
• மேலதிக விபரங்களுககு யாருடன் தொர்பு கெள்ள வேண்டும்
• ஊடகவியலாளர் கலந்து கொள்ள அழைக்கும் ஒரு அழைப்பிதழ்
• புகைப்படம் எடுக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் கூற மறக்காதீர்கள்!
• பின்னணியாளர்/உண்மை நிலவர அட்டை


” பின்னணியாளர்uot; என்பது உங்கள் கம்பனியின் வரலாற்றை—இதன் உற்பத்திப்பொருட்கள், சேவைகள், இதன் சந்தை/இண்டஸ்ட்ரி, மற்றும் இதன் முகாமைத்துவக் குழு பற்றிச் சொல்கிறது. பின்னணியாளர் ஒருவர் உங்களது கம்பனியின் வரலாறு பற்றி கூறுவார். அது உங்களுடைய மிக முக்கியமான தகவல்களை உள்ளடக்க வேண்டும். அவையாவன நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்கள் அல்லது சேவைகள், அதன் சந்தை/கைத்தொழில், அதன் முகாமைத்துவக் குழு. அது செய்தியறிக்கையாளரின் அக்கறையை தக்கவைக்கக்கூடிய ஒரு முறையில் எழுதப்பட வேண்டும். நன்மைகள் மற்றும் தகவல்களைத் தெரிவிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கல். இது ஒரு விற்பனை மேம்பாடு பற்றிய கைந்நூல் ஒன்று அல்ல என்பதை மறவாது அதிகளவில் அளவில் உற்பத்தி செய்யுங்கள்.
பின்வரும் ஒவ்வொன்று பற்றியும் ஓரிரு பந்திகளை எழுதுவதன் மூலம் தொழிற்படக்கூடிய பின்னணியாளர் ஒருவரை உங்கள் உருவாக்கலாம்:
• உங்களுடைய கம்பனி என்ன செய்கிறது
• எப்போது, ஏன் உங்கள் நிறுவனம் தொடங்கபட்டது
• உங்கள் நிறுவனத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு
• உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகள்
• உங்கள் நிறுவனத்தின் முக்கிய ஆளணி
ஒரு பக்க நிறுவன விடய அட்டையையும் நீங்கள் உருவாக்கலாம். இது மேலும் சுருக்கமாக பின்னணி விவர அறிக்கையை விட “வெளிப்படையான உண்மைகளை” அதிக அளவில் தெரிவிக்கும். உண்மை அறிக்கையானது உங்கள் நிறுவனத்தைப் பற்றிய பின்வரும் அடிப்படை உண்மைகளைத் தெரிவிக்கும்:
• உங்கள் நிறுவனத்தின் பெயர்
• உங்களது முகவரியும் தொலைபேசி இலக்கமும்
• உங்கள் நிறுவனத்தின் கவனம்
• உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகள்
• உங்கள் முகாமைத்தவக் குழு
• தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களும் தொலைபேசி இலக்கங்களும்
 சுயசரிதைகள்
உங்கள் நிறுவனத்தின் அனைத்து உயரதிகாரிகளின் சரியான சுயவிரங்களைப் பேணுவது மிகவும் முக்கியமாகும். இவை நீங்களாகவே ஊடக நேர்காணலுக்கு அழைக்கும்போதும், ஊடக பிரசாரநடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் மிகவும் அவசியமானவையாகும். ஏனெனில் செய்தியாளர்கள் அவர்கள் நேர்காணுவதற்கும் நபர்களைப் பற்றி அறிந்து கொள்ளுவதற்கும் விரும்புவார்கள்.
குறிப்பிட்ட நபரின் தற்போதைய பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துங்கள் உங்கள் நிறுவனத்துக்காக அவர் என்ன செய்கிறார்? இதுதான் நீங்கள் சேர்க்க வேண்டிய மிக முக்கிய தகவலாகும், மேலும் இது தொடக்கத்திலேயே இருக்க வேண்டும். (உதாரணமாக, ஜோன் ஸ்மித் எங்கள் நிறுவனத்தின் ஏதேனும் விற்பனை முயற்சிகளை கண்காணித்து வருகின்றார்). வேறுவிதமாக சொல்வதானால், தலைகீழ் கால வரிசையில் இதை எழுத வேண்டும் – அதாவது இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் முதலிலும் பழைய தகவல் இறுதியிலும் வர வேண்டும், சிறப்பாக நீங்கள் இதனை அமைக்கலாம் – ஒரு நபரின் தனிப்பட்ட திறன்களைப் பற்றி அதிகம் கூறலாம். சுயசரிதைகளை எழுதும்போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளுங்கள்:
• இந்த நபர் என்னுடைய நிறுவனத்துக்காக என்ன செய்கிறார்?
• ஏன் இந்த தொழிலை அவர் சிறப்பாக செய்கிறார்?
• அவருக்கிருக்கும் பிற தகுதிகள் என்ன?
• இதற்கு முன்னர் அவர் என்ன செய்தார்? அது அவரின் தற்போதையப் தொழிலுடன் தொடர்புடையதா?
• இந்த நபரைப் பற்றி இது நல்ல விடயம் என்று உண்மையில் சுவாராத்தியமாக என்னை சிந்திக்க வைக்கும் பிற விடயங்கள் உண்டா?”” ?
• ஊடகப் பட்டியல்கள்/தொடர்புகள்


உங்களுடைய வாடிக்கையாளர்களின் சரியான தரவுகளைப் பேணுவது முக்கியமாகும். அத்துடன் உங்களுடைய செய்தியினூடாக சரியான மக்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் சென்றடைகின்றனவா என நிச்சயப்படுத்திக் கொள்ளுவதும் அவசியமாகும் பெரும்பாலான சிறு வியாபாரங்கள், சரியான நபர்களைச் சென்றடையும் என்ற எண்ணத்தில் அவர்களுடைய செய்திக் கட்டுரைகளை “பதிப்பாசிரியர் ” என்று மட்டும் குறிப்பிட்டு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழக்கூடும். சரியான பதிப்பாசிரியரின் அல்லது செய்தியறிக்கையாளரின் பெயர் உங்களுக்கு தேவை.
சரியான பதிப்பாசிரியர் குழு நபரை எளிதாக தொலைபேசியில் அழைத்து கேட்டுப் பெறலாம். பின் அந்த நபரை அறிந்து கொள்ளலாம். உங்களுடைய மக்கள் தொடர்பு முகாமுக்கு இவ்வகையான பதிப்பாசிரியர் குழுவின் தொடர்புகள் மிகவும் முக்கியமானவையாகும். இதனை இவ்விதமாக கருதலாம்: ஒரு செய்தியறிக்கையாளர் அவருக்கு தெரிந்த நிறுவனம் அல்லது நபரைப் பற்றி தான் எழுத விரும்புவார், அத்துடன் அவரின் சிநேகித நிறுவனம் அல்லது நபரைப் பற்றிதான் அதிகம் அதிகமாக எழுத விரும்புவார்.
பதிப்பாசிரியர் குழுவில் உள்ளவர்கள் சரியான கால இடைவெளியில் மாறிக் கொண்டே இருப்பார்கள், செய்தியறிக்கையாளர்களும் சிப்ட் “பீட்ஸ்” அடிப்படையில் (அவர்கள் கவனிக்கும் பகுதிகள்) மாறுவார்கள். உங்களுடைய ஊடகப் பட்டியல் 4-6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அதனை இற்றைப்படுத்தி வையுங்கள்.
உங்களது ஊடகத் தொடர்புகளை தரமுடையதாக ஆக்க நீங்கள் உங்களுக்குள்ளே பின்வரும் வினாக்களை வினவுங்கள்.
• நான் பிரபல்லியமடைய வேண்டிய வெளியீடு இதுதானா?
• எனது வாடிக்கையாளர்கள்/வாசகர்கள் இந்த வெளியீட்டை வாசிப்பார்களா(அல்லது இந்த TV நிகழ்ச்சியைப் பார்ப்பார்களா)?
• என்னுடைய நிறுவனம் போன்ற நிறுவனங்களைப் பற்றி இந்த நபர் எழுதுவாரா?
• என்னுடையதைப் போன்ற செய்தி நிகழ்வுகளைப் பற்றி இந்த நபர் கட்டுரைகள் எழுதுகிறவரா?
• இந்த பத்திரிகையில் உள்ள வேறு ஏதேனும் எழுத்தாளர் அல்லது பதிப்பாசிரியர் எனது நிறுவனத்தில் ஆர்வம் உடையவராக இருப்பாரா?
• செய்தி மாநாடுகள் / கருத்தரங்குகள்
ஒரு மாநாடு (அல்லது ஊடக மாநாடு) என்பது ஊடகவியலாளர்களை நீங்கள் அழைத்து இந்த முக்கியமான அறிவிப்பைப் பற்றி தெரிவிக்கும் முறையான அறிவிப்பாகும். பெரும்பாலும், உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் இல்லாவிட்டால், சிறு வியாபாரங்கள் ஊடக மாநாடுகளை வரவேற்றக் கூடாது. அநேகமாக இந்த வகையான நிகழ்ச்சியை நியாயப்படுத்தும் அளவுக்கு உங்களிடம் ஈர்ப்புத் தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிற மக்கள் தொடர்பு முறையியல்கள் அதிக பயன் தரக்கூடியதா அமையலாம்.
ஒரு ஊடக மாநாட்டில் கூட்டத்தில் மிகவும் செயல்மிக்க சொல் “செய்திகள்”ஆகும். உண்மையான செய்தி விபரங்களை வழங்குவது பற்றிய வாக்குறுதியை அளித்துதான் ஊடகவியலாளர்களை நீங்கள் அழைக்க முடியும். அந்த வாக்குறுதியை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். நீங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை எனின், “ஓநாயை” போல கத்திய சிறுவனின் கதையாகிவிடும். ஒருமுறை ஒரு பத்திரிகையாளரின் நேரத்தை வீணாக்கினால், அதன் பின்னர் அவரை உங்கள் ஊடக மாநாடுகளுக்கு உங்களால் வரவழைக்க முடியாது. உங்கள் நிறுவனத்தின் நன்மதிப்புக்கு நீங்கள் எதையும் செய்திருக்க மாட்டீர்கள்..
ஒரு செய்திச் சுருக்கம் சம்பிரதாய ஒன்றுகூடலை விட சற்று வித்தியாசமானது– நான்கு அல்லது ஐந்து ஊடகவியலாளர்களை அழைத்து உங்கள் நிறுவனத்தைப் பற்றிய செய்தியை வழங்குவீர்கள் அல்லது புதிய உற்பத்திப் பொருள் பற்றிய விவரங்களை வழங்குவீர்கள். உங்கள் நிறுவனம் என்ன செய்கிறது என்பதை பத்திரிகைகள் அறிந்து கொள்ள கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரம் செலவழித்து பதிலளிக்கலாம். உங்கள் நிறுவன கருத்தரங்க அறை, உணவகம் அல்லது வேறு வசதியான இடத்தில் இதனை நிகழ்த்தலாம்.
ஒரு ஊடகவியலாளர் கூட்டம் அல்லது செய்தி சுருக்கம் சரியானதாக இருக்கும் சந்தர்ப்பங்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன:
• ஒரு புதிய உற்பத்தி அல்லது சேவை பற்றி உங்கள் நிறுவனம் அறிவிக்கிறது
• உங்கள் நிறுவனம் ஒரு வலிமையான போட்டி நிறுவனத்தை வாங்குகிறது (அல்லது வாங்கப்படுகிறது)
• உங்களது நிறுவனம் ஒரு பாரிய நிறுவனத்துடன் பெரியதொரு கூட்டுத்தொழிலைத் தொடங்குகிறது
• முக்கியமான வாக்கெடுப்பு அல்லது கருத்துக்கணிப்பின் முடிவுகளை அறிவிக்க
திப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை
http://srilanka.smetoolkit.org/srilanka/ta_LK/content/ta_LK/256/Elements-for-a-Successful-Press-Campaign