முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அல்ல; த.தே.கூ புரிய வேண்டும் - அசாத்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணுகின்றமை தவறான விடயம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணகள் இணைக்கப்படுகின்றமை குறித்து லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுகின்றமை குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என அசாத் சாலி கூறியுள்ளார்.