இராஜினாமா செய்தார் றிப்கான் பதியுதீன்; புதிய ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது!


பாறுக் ஷிஹான்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு இன்று(6)  நடைபெற்றுவரும் நிலையில் அவர் இந்த பதவி விலகலை அறிவித்து அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.


இதன் போது கருத்து தெரிவித்த அவர் தனது கட்சித்தலைமையின் வேண்டுகோளினை கருத்தில் கொண்டும் முசலி பிரதேசத்தின் அபிவிருத்தியை மையமாக கொண்டும் புதிய உறுப்பினராக வரவுள்ள அலிஹான் சகீப்பிற்கு அர்ப்பணிப்புடன் தனது பதவியை விட்டுக்கொடுத்து மக்களின் சேவையை செய்துள்ளதாகவும் சந்தோசத்துடன் சபையை விட்டு வெளியேறுவதாக கூறினார்.

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் என்பதுடன் வடக்கு மாகாண சபையில மூன்றரை வருடங்களாக மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
Powered by Blogger.