முஸ்லிம் கலாச்சார அமைச்சு இமாம், முஅத்தின்களுக்கு சம்பளம் வழங்குமா?முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு நாட்டிலுள்ள அமைச்சின் கீழ் பதியப்பட்டுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம் மற்றும் முஅத்தின்மார்களுக்கு சம்பளம் வழங்குமா என தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம் கேட்டுள்ளது,

முஸ்லிம் கலாச்சார அமைச்சு இப்பொழுது தனியாவுள்ளது, முன்னர் இது பௌத்த அலுவல்கள் அமைச்சோடு இருந்தது, நாட்டில் நல்லாட்சி மலர்ந்திருக்கும் நிலையில் முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான உரிமைகளை கோர முடியும் அதில ஒன்றுதான் இமாம் முஅத்தினுக்கான கொடுப்பனவுகள், அவைகள் அரசினால் வழங்கப்படுகின்ற போது அவர்களுக்கு நிரந்தர தொழில்வாய்ப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் அதுபோல அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிவாசல்கள் இயங்கும், இது கலாச்சார அமைச்சுக்குதான் நல்லது, முஸ்லிம்கள் பிளவுபட்டுள்ள இத்தருவாயில் ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கம் பேண கலாச்சார அமைச்சு பள்ளிவாசல்கள் பதியப்படுதலை கட்டாயப்படுத்த முடியும். பதியப்படாத ஒற்றுமையை சீர்குலைக்கும் பள்ளிவாசல்களை மூடிவிடவும் நடவடிக்கை எடுக்க முடியும்.