Oct 17, 2017

வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்­லிம்­க­ளுக்கு தனி மாகாணம்; ஹக்கீம் திடம்வட மாகா­ணத்­துடன் கிழக்கு மாகாணம் இணை­வ­தாக இருந்தால்  முஸ்­லிம்­க­ளுக்கு தனி மாகாணம் வேண்டும்.  இதுவே எமது கோரிக்­கையும் கொள்­கை­யு­மாகும். முஸ்­லிம்­களின் சம்­மதம் இல்­லாமல்  வடக்கு கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மில்லை என்­பது தமிழ்  தலை­மை­க­ளுக்கு நன்கு தெரியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.
காத்­தான்­கு­டியில் நேற்று நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 காத்­தான்­குடி கடற்­க­ரை­யி­லுள்ள பிஸ்மி வர­வேற்பு மண்­ட­பத்தில் நடை­பெற்ற இந்த ஒன்று கூடலில் தொடர்ந்து கருத்து தெரி­வித்த அவர், முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி அலட்டிக் கொள்­ளத்­தே­வை­யில்லை. நாங்கள் தமி­ழர்­களின் அபி­லா­சை­க­ளுக்கு குறுக்­காக நிற்­ப­தாக காட்­டிக்­கொள்ளத் தேவை­யு­மில்லை. நாங்கள் சிங்­க­ள­வர்­க­ளுக்கு கூஜா தூக்­கி­க­ளாக பார்க்­கப்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மு­மில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர்கிழக்கு மாகா­ணத்தை வட மாகா­ணத்­துடன் இணைப்­ப­தற்கு தூக்கிக் கொடுத்­து­விட்­டார் என சிலர் கோஷம்­போட்டு மக்­களை பீதி­ய­டையச் செய்­கின்­றனர். இவர்கள் அர­சி­யலை படிக்­க­வேண்டும். அர­சியல் என்­பது சாத்­தி­ய­மா­னதை  வைத்து சாதிக்கும் கலை என்­பதை புரிந்து கொள்­ள­வேண்டும். 
ஒரு மாகாணம் இன்­னு­மொரு மாகா­ணத்­துடன் இணைய வேண்­டு­மாக இருந்தால் அம்­மா­காண மக்­க­ளிடம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடாத்­தப்­படல் வேண்டும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இல்­லாமல் இணைக்க முடி­யாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு பாரம்­ப­ரிய கட­மைப்­பாடு உள்­ளது. மறைந்த தலைவர் காலத்­தி­லி­ருந்து இது இருக்­கின்­றது.  வட மாகா­ணத்­துடன் கிழக்கு மாகாணம் இணை­வ­தாக இருந்தால்  முஸ்­லிம்­க­ளுக்கு தனி மாகாணம் வேண்டும்.  இது எமது கோரிக்­கையும் கொள்­கை­யு­மாகும். வடக்கு கிழக்கு இணைப்­புக்கு முஸ்­லிம்­களின் சம்­மதம் இல்­லாமல்  சாத்­தி­ய­மில்லை என்­பது தமிழ்  தலை­மை­க­ளுக்கு தெரியும். 
பனம் பழத்தில் காகம் உட்­கா­ரப்போய் பனம் பழம் விழுந்த மாதிரி இன்று சிலர் தாங்­கள்தான்  வடக்­கையும் கிழக்­கையும் பிரித்தோம் என கூறு­கின்­றனர். இவர்­க­ளுக்கு பாரா­ளு­மன்றம் போவ­தற்கு வாக்­குகள் போதாது. சிங்­கள மக்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்­காக இவ்­வாறு பேசு­கின்­றனர். நான் கண்டி மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்­திற்கு மேற்­பட்ட வாக்­கு­களை பெற்­றவன். இதில் இரு­ப­தா­யிரம் சிங்­கள மக்­களின் வாக்­குகள் உள்­ளன. 
நான் வடக்­குடன் கிழக்கை இணைக்க வேண்டும் என்றோ வடக்­குடன் கிழக்கை பிரிக்­க­வேண்டும் என்றோ  பேச­வில்லை. நான் சிங்­கள மக்கள் மத்­தியில்  இதனை தூக்­கிப்­பி­டித்து பேசினால் இன்னும்  பத்­தா­யிரம் வாக்­குகள் எனக்கு அதி­க­ரிக்கும். நான் ஒரு கட்­சியின் தலைவன்.  நான் இந்த தேவை­யில்­லாத விட­யத்தை பெரி­தா­க­மாற்ற விரும்­ப­வில்லை. 
தமிழ் கட்­சி­களின் தலை­மைகள் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை ஏதோ ஒரு­வ­கையில்  ஒரு நியா­ய­மான இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் பேச முடியும் என்ற நம்­பிக்கை எஞ்சி இருக்­கின்­றது. இது­பற்றி இரு சமூக தலை­மை­களும் பேசி தீர்க்­க­மு­டியும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது. அதற்­காக நாம் போலித்­த­ன­மான அர­சியல் செய்ய விரும்­ப­வில்லை. பொறுப்­பு­ணர்ச்­சி­யோடு  மிகத் தெளி­வாக சாத்­தி­ய­மான  தூரநோக்­குள்ள  ஒரு அர­சியல் கட்­சி­யாக நாம் இருக்­கின்றோம். அதற்­கா­கத்தான் நாம் அளந்து பேசு­கின்றோம்.  இது மாபெ­ரிய இயக்கம்.  இதன் பாரம்­ப­ரி­யத்தை குழி தோண்டிப் புதைக்­க­மு­டி­யாது. இது தனி மனி­த­னுக்­காக உரு­வாக்­கப்­பட்ட கட்­சி­யல்ல.
இன்று எமது கட்­சியின் பலம், பல­வீனம் பற்றி பேசப்­ப­டு­கின்­றது. 37 பேர் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஏழு உறுப்­பி­னர்­களை வைத்து அதன் உபா­யத்தின் மூலம் சகல அதி­கா­ரங்­களும் கொண்ட முத­ல­மைச்சர் பதவி  மற்றும் அமைச்சுப் பத­வி­களை  பெற்று நாம் கிழக்கு மாகா­ணத்தை ஆட்­டிப்­ப­டைத்தோம்.
தேசிய அர­சாங்கம் அமை­வ­தற்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஒரே ஒரு ஆச­ன­மான மட்­டக்­க­ளப்பு ஆசனம்  பெறும் பங்­காற்­றி­யது. இந்த தேசிய அர­சாங்கம் அமை­வ­தற்கு நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின்  பங்­க­ளிப்பை  மறந்­து­விட முடி­யாது. அவர்கள் எம்­மோடு இணைந்து செயற்­பட்­டனர். இந்த தேசிய அர­சாங்­கத்தை அமைத்­த­போது முஸ்லிம் காங்­கி­ரஸின் ஒரு ஆச­னத்தின் பெறு­ம­தியை அன்று ரணில் அறிந்­தி­ருப்பார்.
எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் கட்­சியின் தன்­மானத் தேர்­த­லாகும். தொகு­தியை வெல்­வ­தற்கும் கட்­சியை வெல்ல வைப்­ப­தற்கும் தகு­தி­யான செல்­வாக்­குள்ள வேட்­பாளர் யார் என்ற தீர்­மா­னத்தை கட்சி நடு­நி­லை­யாக நின்று  தெரிவு செய்ய எல்­லோரும் உறு­து­ணை­யாக இருக்­க­வேண்டும்.
கோர­ளைப்­பற்று மேற்கு  மற்றும் ஏறாவூர் நகர சபை­களை  நாம் கைப்­பற்­றுவோம். மட்­டக்­க­ளப்பில் நான்கில் ஒரு பகு­தி­யி­ன­ராக உள்ள முஸ்­லிம்­களின் பாது­காப்பு, சுபீட்சம் என்­பன எமது கட்­சியின் வெற்­றி­யி­லேயே தங்­கி­யுள்­ளது.  எமது கட்சி பல இடங்­களில் ஆட்­சியை கைப்­பற்றும்.  சில இடங்­களில்  ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருகக்கும். அதற்கான வியூகங்களை அமைத்து வருகின்றோம்.
காத்தான்குடியில் கடந்த இரண்டரை வருடங்களில் எமது கட்சி உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நாற்பது கோடிக்கு மேல் அபிவிருத்தி செய்துள்ளோம். இதன்மூலம் அபிவிருத்தி மாயையை உடைத்துள்ளோம். எதிர்வரும் தேர்தலில் எமது வரட்டு கௌரவங்களை தூக்கி எறிந்துவிட்டு  கட்சியின் தன்மானத்தைகாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார். 
இந்தக் கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ளான அலி­சாஹீர் மௌலானா மற்றும் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான பொறி­யி­ய­லாளர் சிப்லி பாறூக், யு.எல்.எம்.என்.முபீன் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பிர­முர்கள் கலந்து கொண்டனர்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network