Oct 4, 2017

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள் அமைச்சர் ஹக்கீம் அரசுக்கு அழுத்தம்


தேர்­தல்­களை உரிய காலங்­களில் நடத்­து­வ­தனை உறு­திப்­ப­டுத்தும் பாரிய கடப்­பாடு பாரா­ளு­மன்­றத்­திற்கே உள்­ளது எனச் சுட்­டிக்­காட்­டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் மாகாண சபைத் தேர்­தல்­களை பிற்­போடாது உரிய காலத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் எனவும் வலி­யுத்­தினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இலங்கை பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தின் 70 ஆண்­டுகள் நிறைவைக் கொண்­டாடும் விசேட அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
பாரா­ளு­மன்ற அமர்வின் 70ஆவது ஆண்டு நிறைவை கொண்­டாடும் இந்தச் சந்­தர்ப்­பத்தில் ஜன­நா­யகம் தொடர்­பாக பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. 
ஜன­நா­யகம் தொடர்­பாக நாம் கண்­டுள்ள நிலைகள் பற்றி விவா­திக்க வேண்­டி­யுள்ள நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் தேசிய பண்­பாட்டை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு விவா­தங்­களின் ஊடாக தவ­றி­யுள்ள சந்­தர்ப்­பங்கள் துர­திஷ்­ட­மா­னவை. பாரா­ளுமன்­றத்தில் இடம்­பெ­று­கின்ற விவா­தங்­களின் தரம் படிப்படி­யாகக் குறைந்­துள்­ளமை ஏமாற்­றங்­களைத் தரு­கின்­றன. 
தம்மை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­களை மக்கள் தேர்தல் மூலம் தெரி­வு­செய்­தனர். பிரதிநிதிகள் சரி­யான முறையில் செயற்­ப­டா­மையே கடந்த மூன்று தசாப்த யுத்­தத்­துக்கு வழி­வ­குத்­தி­ருந்­தது. யுத்­தத்தால் ஏற்­பட்ட மோச­மான அமைப்பு முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் நாட்டில் உள்ள பல்­லின சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை பலப்­ப­டுத்­து­வ­திலும் நம்­பிக்­கை­யையும், ஒற்­று­மை­யையும் கட்­டி­யெ­ழுப்­பு­வது தவ­ற­வி­டப்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பா­டா­னது மோச­மான மன­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அத்­த­கைய நிலை­மைக்கு இந்தப் பாரா­ளு­மன்­றமும் வழி­வ­குத்­துள்­ள­மை­யா­னது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தொன்­றாகும். 
பாரா­ளு­மன்ற பெரும்­பான்­மை­யா­னது ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு முக்­கி­ய­மாக இருக்­கின்­றது.  ஆனால் மாற்றுக் கருத்­துக்­க­ளுக்­கான அல்­லது அதி­ருப்­தி­யான கருத்­துக்கள் தொடர்­பான வெளிப்­ப­டுத்­தல்­களைச் செய்­வ­தற்கு சந்­தர்ப்­பங்கள் குறை­வா­கவே இருக்­கின்­றன. பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­படும் மாற்றுக் கருத்­துக்கள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் தேசியத்துக்கு எதி­ரா­ன­தா­கவும் பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இது­வொரு கவ­லைக்­கி­டமான நிலை­மை­யாகும். தற்­பொ­ழுது புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதன் ஆரம்ப நிலையில் இருக்­கின்றோம். கடந்­த­கால தவ­று­களை தவிர்ப்­ப­தற்­கா­கவே இந்தச் செயற்­பாடு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்ற முறை தொடர்பில் விவாதிக்க வேண்டியதொரு நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு மறுசீரமைப்பு முன்வைக்கப்பட்டாலும் அது வெளிப்படையானதாக இருக்கவேண்டும். அதேபோன்று அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அதேபோன்று உயர்ந்த தரமுடையதாகவும் இருக்க வேண்டும். கட்சி சார்ந்த அரசியலுடன் இவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என்றார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post