மட்டக்களப்பு கிரனில் முஸ்லிம்களின் வியாபாரத்திற்கு தடை; இதுததான் நல்லாட்சியா?றியாஸ் ஆதம்

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்சாரத் தூணில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வாழைச்சேனையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் இரண்டு சமூகத்தினரிடையேயும் கடும் வாக்குவாதம் நிலவியிருந்த நிலையிலேயே இந்த பதாகை மாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.