முஸ்லிம் அரசியல்வாதிகளே சண்டைபிடிக்காதீர்கள் - நீங்கள் எல்லோரும் முஸ்லிம்கள்இலங்கை முஸ்லிம்களின் கட்சிகள் என்று தங்களுக்குள் மார்தட்டிக்கொள்ளும் முஸ்லிம் கட்சிகளும், கட்சி தலைவர்களும் தங்களுக்குள் ஆளையாள் புறம்பேசி, வீண் பழி சுமத்தி முரண்பாடாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது இது எமது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்யமானதாக தென்படவில்லை,

நமது முஸ்லிம் சமூகம் பற்றி ஏனைய இனத்தவர்கள் பிழையாக நினைக்கின்ற ஏன் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை நாம் செய்பவர்களாக இருக்கிறோம், சமத்துவம் கூறும் இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு உலக ஆசையின் நிமித்தம் பொய்களையும் புரட்டுக்களையும் பேசுகிறோம். இது நிரந்தரமற்ற உலகு.

மறுமையை எண்ணி செயற்படுதல் வேண்டும் மூன்றாவது இனமாக நாங்கள் இலங்கையில் இருக்கிறோம், ஏனைய இனங்கள் மதம் என்றும் சமூகம் என்றும் வரும்போது இணைவதுபோல நாம் இணைய மறுக்கிறோம் இஸ்லாம் தெளிவானது.

பள்ளிவாசலுக்குள் இருந்துதான் உலகை முஸ்லிம்கள் ஆண்டனர், இன்றும் முஸ்லிம்களின் ஆட்சிகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் யஹூதிகள் ஆனால் நாம் பிளவு பட்டுவிட்டோம். தயவு செய்து நாம் பிரிந்து நின்று கருத்துக்களை பரப்பாமல் ஒன்றாய் நின்று நமது எதிர்கால சமூகத்திற்காக செயற்படுவோம்.

பஹத் ஏ.மஜீத்