ஞானசார தேரரின் வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான இணக்கப்பாடும், சமூக காட்டிக் கொடுப்பும்


அஸ்ரப் அலி
இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி உலகளாவிய முஸ்லிம்களுக்கும் வெறுப்புச் சொற்களை உதிர்த்து, அல்லாஹ்வை பழித்து, நபிகள் பெருமானாரை அவமதித்து, அல்குர்ஆனை நிந்தித்தவர் காவிப் பயங்கரவாதி ஞானசார தேரர்.

இலங்கையில் அளுத்கம உள்ளிட்ட எத்தனையோ ஊர்கள் அச்சத்தில் உறைந்து போயிருந்த நாட்களின் பின்புல ஆதிக்கம் அந்தக் கயவன் தான். ( தேவையென்றால் இதனை மொழிபெயர்த்து வழக்குப் போடலாம். சட்டப்படி சந்திக்க நான் தயார்)
வர்த்தக சமூகமாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பை உடைத்த மூர்க்கன். அரக்கன்.
இப்படியான ஞானசார தற்போது அடங்கிப் போயிருக்கின்றார். அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை நிச்சயம் என்ற அச்சம் தான் அதன் காரணம். ஆனால் அதனை விட ஆயிரம் அட்டூழியங்களை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அவர் செய்திருந்தாலும் அதற்கு எதிராக வழக்குகளைத் தவிர எந்தவொரு தண்டனையும் எம்மவர்களால் வாங்கிக் கொடுக்க முடியாது போன கைசேதத்தை மெச்சிக் கொள்வது ஒன்றே நம் முன் உள்ள ஒரே பலவந்த தெரிவாக உள்ளது.
இந்நிலையில் பெயரளவுக்கு நடந்து கொண்டிருக்கும் வழக்குகளையும் வாபஸ் வாங்கவும், அதே நேரம் அப்துல் ராசிக் வழக்கைப் பற்றி மூச்சுவிடாதிருக்கவும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் சிலர் இணக்கம் கண்டுள்ளதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன். நீங்கள் கட்டுவிரியனை நல்ல பாம்பாக வர்ணித்து நம் சமூகத்தின் தலைமேல் தூக்கி வைக்க முயற்சிக்கின்றீர்கள். ஆனால் அந்தக் கண்ணாடி விரியனோ உடம்பெல்லாம் விசம் கொண்ட கொடிய நச்சுப் பாம்பு. கொத்த ஆரம்பித்தால் நீங்களும் தப்ப மாட்டீர்கள்.
ஆகவே மூடிய அறைகளுக்குள்ளும், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் நடக்கும் சந்திப்புகளை இரகசியமாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் அனைத்தும் சிங்கள சமூக தளங்களில் பகிரங்கமாக பகிரப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் பயந்து அடிபணிந்து கெஞ்சுவதாக அங்கே கதையளக்கப்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் எந்தவித அனுமதி, அங்கீகாரம் இன்றி சமூகத்தின் சார்பில் கோப்பி குடித்து, ஞானப் பண்டிதன் குப்பைக் கடையில் வாங்கிய கோழி இறைச்சியை ஹலால் என்றவுடன் நம்பி விழுங்கிய கனவான்களே......
சக இனத்தவரின் மத்தியில் நம் சமூகம் எள்ளி நகையாடப்படும் இந்த அவமானத்தை தேடித் தந்த பெருமை உங்களையே சேரும்...
= இதற்கான நன்றிக்கடன் ஜனாதிபதியின் கட்டார் விஜயத்தின் போது ஒருவருக்கு கிடைத்துவிட்டது. அடுத்தவர்களுக்கும் மிக விரைவில் எலும்புத் துண்டுகள் வீசப்படும். அதே நேரம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் வேறு பெயர்களில் மீண்டும் தலையெடுக்கும். அன்றைக்கு உங்கள் அனைவரையும் தனியாளாகவேனும் தேடி வந்து உதைக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.(