ஹாறுன் மௌலவி அரசியலுக்குள் உட்புகுந்தார்!MI.அஸ்பாக்

மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் இணைப்பாளராக மௌலவி அஷ்ஷெய்க் MMS.ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த பதவி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

'இவர் கல்குடாவில் கடந்த 7வருட காலமாக  அல்-கிம்மா எனும் சமூகசேவை  நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் பணிப்பாளராகவும்இ  அரேபிய தனவந்தர்களின் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகளைக் கொண்டு பல வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குதல்இ  மற்றும் அடிப்படைத் தேவைகளான சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல்இ வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவுதல்  என்று பல சேவைகளையும் செய்து வருகின்றார்'