மணப்பெண்ணின் தந்தை, உரிய காரணங்களுக்காக இல்லாதவிடத்தில்... தந்தையின் தந்தை அல்லாத விடத்து தந்தையின் சகோதரர்கள் இல்லாதவிடத்தில் மணப்பெண்ணின் சகோதரர்கள்... எக்காரணம் கொண்டும் மணப்பெண்ணின் தாய்வழித் தந்தையோ, தாய்வழி சகோதரர்களோ "வலி"க்கு தகுதியானவர்கள் இல்லை.
இப்படி "வலி"யாக்கப்படும் திருமணங்கள் இஸ்லாமிய முறை திருமணங்கள் அல்ல...
மேற்குறிப்பிட்ட தந்தை வழி ஆண்கள் இல்லாதவிடத்தில் மணப்பெண் எழுத்து மூலமாக "காதிரி"யிடத்தில் நிலமையை தெரிவித்து "வலி"யை தீர்மானிக்க அனுமதி கோரவேண்டும்... "காதிரி"யின் அனுமதி கிடைத்தும் பத்து நாட்களுக்கு பின்னர்தான் திருமணம் நடைபெற்று பதிவு செய்ய வேண்டும்...
திருமணங்களை ஹலாலாக செய்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறையில் மிக முக்கியமானதுதான் இந்த வலி ஆனால் இந்தவிடையத்தில் கவனம் செலுத்தும் உலமாக்கள்,இந்த வலி சம்பந்தமாக வலியுறுத்திக்கூறும் உலமாக்கள் ஏன் சீதனத்திருமணங்கள் ஹராமானவை என்று எடுத்துக்கூறத்தயங்குகின்றார்கள் ?
முறைப்படி வலி சொல்லி சீதனம் கொடுத்து நடாத்தப்படும் திருமணங்கள் ஹலாலான திருமணங்களா ? ஹராமான திருமணங்களா ?

இந்த பத்தி நியுஹோப் அக்கரைப்பற்று குளோபல் கமியுனிட்டி எனும் பக்கத்திலிருநு்து பிரதி பண்ணப்பட்டது

Share The News

Post A Comment: