Oct 18, 2017

சீரழிந்து வரும் முஸ்லிம் மாணவிகள்! பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்!


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே!

உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம்
பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின்
சதியை முறியடிப்பதும்,நமது கடமையாக இருக்கின்றது.
இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம்மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இதற்கான முழுப்பொறுப்பையும்பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும்,
அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான
காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண்
குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன்
போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன
எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல்
இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்,
எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க
அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி.
வீடியோ என வீட்டிற்குள்
அனுமதித்து வழிதவற
வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ
அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை,
தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து
கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள்
மனைவியரை தனிக்குடித்தனம்
வைப்பது அல்லது அவர்கள்
இஸ்ட்டப்படி உரிய
கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும்
சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது.
பெண்களை தனியாக பிடவ கடை, நகைக்கடை என
மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களுக்கு பொருட்களை
இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில
வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: ”இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர்  கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்
கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளவேண்டும்”.
(அல்குர்ஆன்: 24:37)
”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால்
(அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம்காட்டாதீர்கள். ஏனென்றால் எவன்
உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்)
இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான்.
இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள்.
(அல்குர்ஆன்33:32)

1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம்(இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது)
என்பதனை கண்டிப்புடன்
கூறி அனுப்புங்கள்.

அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச்
சொல்லுங்கள்.

2. ஆண்களும் பெண்களும்
இணைந்து படிக்கும்
பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த
சதி வேலை அதிகமாக
நடக்கிறது என்பதை கவனத்தில்
கொள்ளவும்.

3. தனியாக செல்லும்
மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது.
பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும்  பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு(அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்..

4. வெளிநாட்டிற்கு செல்லும்
கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது
மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச்
செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள
பெண்களுக்கு மொபைல்
போன்களை வாங்கிக்
கொடுக்க வேண்டாம்.லேன்ட் லைன் டெலிபோன்
மட்டும் இருந்தால் போதுமானது.

6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள்
தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர்,
கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள்
போன் நம்பரை கொடுக்க வேண்டாம்.

7. தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை
ஈர்க்கும் வகையில்,
அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும்
வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த
தொடர்பை துன்டியுங்கள்.
மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.
ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள்.

ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம்  இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது
குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள்
கேட்கும் கேள்விகளுக்கு பதில்  அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று  முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள்.
உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும்
விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள்
எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக
இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான
தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும்  வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும்.
மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள்
சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள்
துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள்
தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள்,
அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள்.
பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த
மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள்
தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள்
தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம்.
ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள்ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க
வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக
அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம்
உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம்
இல்லாத லூசான பர்தாக்களை அணியச்சொல்லுங்கள்,
பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும்,செக்சியாகவும்
அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள்
அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்)
போன்வற்றை தவிருங்கள்,இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப்படுகிறார்கள்

பட்டு கெட்டபடங்கள் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள். பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும்  சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின்
கதறாமல்,இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண் பிள்ளைகளை கண்கானியுங்கள்.

அத்னான் அப்துல் மஜீத்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network