அதாஉல்லாவுடன் கூட்டுச் சேரும் அன்சில் மற்றும் தாஹிர்; தேர்தலுக்கும் தயார்தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாவுடன் தங்களின் அடுத்த தேர்தல் பிரச்சார மற்றும் அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வுள்ளதாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசளார் அன்சில், நிந்தவூர் பிரதேச தவிசாளர் தாஹிர் ஆகியோர் சூசகமாக தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.

துாய் முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களான இருவரும் தென்கிழக்கு அரசியலில் முக்கிய புள்ளிகள், ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துாய் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவில்லை அவர்கள் தேர்தல் கேட்க ஒரு கட்சியை நாடவேண்டும் அதற்காக தேசிய காங்கிரஸில் இணைந்திருக்கலாம் அண்மைக்காலமாக அதாஉல்லாவும் இருவரை பற்றியும் பெருமையாக அவர்களது ஊர்களில் இடம்பெற்ற அரசியல் மேடைகளில் உரையாற்றியிருந்தார்.