ரோஹிஞ்சாக்கள் இலைங்கை வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது; சம்பிக்க #நல்லாட்சி


வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு காரணம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,கோத்தபாய ராஜபக்ஸவுமே காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெலஉறுமயவின் கட்சித் தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
குறித்த இருவரும் செய்துக்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமையவே புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டு கைச்சாத்தாகும் போது தான் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டதாகவும்,எனினும் அந்த எதிர்ப்பினையும் மீறி ஒப்பந்தம் கைச்சாததாகவும்,இதனடிப்படையிலேயே மியன்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இலங்கை அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.மியன்மார் பிரச்சினையை மியன்மாரே தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.