அட்டாளைச்சேனையை நகரசபையாக தரமுயர்த்த ஏன் முயற்சிக்கவில்லை?அட்டாளைச்சேனையை நகரசபையாக தரமுயர்த்த ஏன் புத்திஜீவிகள் முயற்சித்திருக்கவில்லை என்று ஒரு கேள்வி சமூக வலையில் எழுந்துள்ளது. குறைந்த பட்சம் அக்கரைப்பற்றை இரண்டாக பிரித்து பிரதேச சபை, மாநகர சபை என மாற்றும் போதே அட்டாளைச்சேனையின் உள்ளுராட்சி அலகை மாற்றியிருக்க முடியும் அதை எந்த காழ்ப்புணர்ச்சியில் செய்யவி்ல்லை என்று ஆராய வேண்டும் என தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் தலைவர் பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.


எதிரவ்ரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் கழுத்தறுப்புகளுக்கு அப்பால் நின்று விசேட பிரச்சார அரசியல் செய்யவுள்ள குறித்த இயக்கம் தென்கிழக்கு மற்றும் அதற்கு வெளியே முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்ட படலத்தை முஸ்லிம் ஊர்களில் மிகத்தெளிவாக கூறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் தலைவரின் சொந்த ஊரிலில் இருந்து ஆரம்பிக்கும் பிரச்சாரத்தி்ல் அட்டாளைச் சேனை மக்கள் இழந்துள்ள விடயதானங்கள் பற்றி அதிகம் பேசப்படவுள்ளதாக இயக்கத்தின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.