Oct 17, 2017

இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடும் முஸ்லிம் புத்திஜீவிகள்இலங்கை முஸ்லிம்களிடையே தற்போது பேசு பொருளாகிய விடயம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கான முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் தேசிய ஐக்கிய முண்ணனியின் தலைவர் ஆஸாத் சாலி ஆகியோர் பொதுபல சேனாவுடைய பொதுச் செயலாளர் ஞானசார தேரரை சந்தித்த விடயம் வைரலாக சமூக வலைத் தளங்களிலும் மற்றும் இணையத் தளங்களிலும் பரவ ஆரம்பித்துள்ளது. 

அது மாத்திரமன்றி சிரேஸ்ட சட்டத்தரணியும், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான சிராஸ் நூர்தீனிடம் ஞானசாரவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை மீளப்பெற்றுக் கொள்ள கோரிய விடயங்கள் என்பன முஸ்லிம் மக்களிடையே ஒரு பாரிய எதிர்ப்பலையை உண்டுபண்ணியுமுள்ளது. 

இவ்வாறான விடயங்களுக்கு பின்னால், இலங்கையின் மிகப்பெரும் அரசியற் பின்புலங்கள் மறைகரங்களாக இருப்பதனை முதலில் புரிந்துகொண்டால் குறித்த கட்டுரை வாசிக்கும் வாசகர்களுக்கு இலகுவானதாய் அமையும். 

நல்லாட்சி ஆளப் பெற்றதன் பின்னரான காலம் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அநீதிகள் நிறைந்த காலம் என்பதனை நாம் அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்கின்றோம். இதனை நாம் குறிப்பிடுவதுக்கு முன்னர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் குற்றிப்பிட்டுள்ளார். ஆனால் ஆட்சியை விட்டு வெளியேறமுடியாத அளவுக்கான கடிவாளம் இவர்கள் அத்தனைபேருக்கும் ஆட்சியாளர்கள் இட்டுள்ளனர் என்பது உண்மையே. 

குறிப்பாக இலங்கையினுடைய தற்போதைய சூழல், அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்கு சூழ்ச்சிகள் நிறைய அரங்கேரும் ஒரு காலகட்டம். அவ்வாறான ஒரு சூழலில்  மாகாண சபைகள் திருத்தச் சட்டம் என்கிற ஒர விடயத்தை கொண்டு வந்து ஜனநாயகத்தை புதைத்திருகின்றது. அதே போல் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் முஸ்லிம் களேபரம் அடைந்திருக்கும் ஒரு நிலையில் மக்களை வேறு ஒரு நிலையில் சிந்திக்க வைக்கவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டடிருக்கின்றது. அந்த நிலையே இது .

பொதுவாக ஞானசாரவை சந்திக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை என்பதுவே முஸ்லிம்களின் நிலைப்பாடு. ஆதனை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஏன் இவர்கள் ஞானசாரவை சந்திக்க வேண்டும். அதற்காக என்.எம்.அமீன் சொல்லியிருக்கின்ற காரணம் என்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமல்ல. 

பொதுவாக என்.எம்.அமீன் ரணில் சார்பு அரசியல் விருப்பத்தைக் கொண்டிருப்பவர். ருணில் கீறுகின்ற கோட்டிற்குள் நின்றே தனது நடவடிக்கையை மட்டுப்படுத்த விரும்புவர். ஆக பொதுபலசேனா அமைப்பு ரணிலுக்கு பூரண விசுவாசமுடைய அமைப்பு. நல்லாட்சி என்கிற ஒன்றினை நிறுவ மிக நீண்டகால திட்டத்துக்கு உரமூட்டியவர்கள் என்றே சொல்லுதல் சாலச்சிறப்பு. எனவே இவ்விடத்தில் என்.எம்.அமீனுடைய வகிபாகம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை வாசகர்கள் அனுமானிக்க முடியும்.
அடுத்து ஆசாத் ஷாலியும், அவருடைய குடும்பமும் பொதுபலசேனாவுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதனை ஊடகங்கள் அவ்வப்போது தோலுரித்துக் காட்ட தயங்கவில்லை. அதுமாத்திரமன்றி ஆட்சியாளர்களை ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்கின்ற அதேவேளை பின்கதவால் ஆட்சியாளர்களின் காலில் விழுகின்ற ஒரு அரசியல் வாதியக மக்கள் பார்;க்கின்றதும் இவ்வரங்கில் புதிதல்ல. 

ஜம்இய்யத்துல் உலமா, எப்போதும் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்குகின்ற நிலையில் இருந்து விடுபடவில்லை. மஹிந்த காலத்திலிருந்து இந்த விமர்சனம் மக்கள் மத்தியில் கோலோச்சியிருந்து தற்போது அந்த நிலை ஒரு படி மேல் எழுந்துள்ளது. இதுவே யதார்த்தம். 

இவ்வாறான பல விமர்சனங்களை கொண்டுள்ளவர்கள், பொதுபலசேனாவினுடைய பொதுச் செயலாளரை சந்தித்திருப்பதன் நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருந்திருக்கும். 

பொது பல சேனாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  உருவாக்கினார் என்கிற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் இவர்கள் ஞானசாரவுக்கு இஸ்லாம் கற்பிக்க சென்றதானது “இருட்டில் தொலைத்த ஒரு பொருளை வெளிச்சத்தில் தேடுவதுக்கு ஒப்பானதே” மஹிந்தவுக்கு அல்லவா இஸ்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டும், அவருக்கல்லவா ஹிதாயத் என்கிற நேர்வழி கிடைக்க பாடுபட்டிருக்க வேண்டும். மஹிந்த நல்லவர். அவருடன் இருந்தவர்கள்தான் இவ்வாட்சியை பாழ்படுத்தியவர்கள் என்று கூறுபவர்கள். ஞானசாரவின் குணாம்சங்கள் பற்றி எப்போதாவது கூறியிருக்கின்றனரா? அப்படியானால் ஏன் இவர்கள் ஞானசாரவுடைய காலடிக்கு சென்றனர். இதற்கு இவர்களால் கற்பிக்கப்படும் நியாயங்கள் முஸ்லிம்களிடத்தில் எந்தப் பொறுமானமும் அற்றவையே. 

நீதிமன்றை அவமதித்த குற்றசாட்டுக்கு சிறைவாசம் அனுபவிக்க இருக்கும் ஞானசார , தனக்கு  வேறு எந்த வழக்குகளும் இருக்க கூடாது என்கிற நீதிதுறையின் கட்டளைகளை நிறைவேற்ற முஸ்லிம்களின் காலடிக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு இடம்பெறாமை மிகப்பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. சாதாரண நடைமுறையில் ஒரு சிக்கலில் யாராவது அகப்பட்டிருந்தால் உரிய நபரே எதிர்த்தரப்பை சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எடுத்துரைத்து சமாதான நிலைக்கு வர முயற்சிப்பர். ஆனால் இங்கு அவை தலை கீழாக இடம்பெற்றுள்ளது. 

முஸ்லிம் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வோர் ஞானசாரவை சந்தித்த விடயத்தை விமர்சிக்கும் அதிகமான புத்திஜீவிகள் கூறும் கருத்தினை எழுதில் தட்டிவிடமுடியாது. 
ஞானசாரவை சந்திக்க சென்றவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து தற்போது நாடடில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபாத்துக்களில் இருந்து விடுபடுவதுக்கான ஆலோசனையை பெற்றிருப்பதுடன், எதிர்காலத்தில் முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான விடயங்கள், பொதுபலசேனா, மற்றுமுள்ள அமைப்புக்களின் தொடர் நடவடிக்கைகள் என்பனவற்றை அகலப்பார்ரவையுடன் கலந்துரையாடிருக்க முடியும். என்கின்றனர். அத்துடன் நாடாளுமன்றிலுள்ள 22முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், நியாயமான தீர்வு கிடைக்காது விடத்து மஹிந்தவுடன் ஆட்சியமைக்கும் யுக்தியை கையாண்டிருக்க முடியும் என்கின்றனர். ஆனால் ஞானசாரவை சந்தித்து சம்பந்தம் பேசிய விடயமானது முழு முஸ்லிம் சமூகத்தையும் சியோனிஷ சக்திகளுக்காக அடகு வைத்ததாகவே கருதுவதைத் தவிர வேறில்லை. 

மேலும், சட்டத்தரணி சிராஸ் நூர்தின் மூன்று பேர்களுடைய பெயரை சொல்லி அவர்கள் என்னிடம்  வழக்குகளளை வாபஸ் பெற கோரவில்லை என்றே சொல்லியிருக்கின்றார். ஆனால் இதில் யார் சொன்னார் என்தனை சொல்லவில்லை. அது அவ்விடத்தில் தொங்கி நிற்கின்றது. இது இன்னும் ஆழமாக ஆராயப்படும் படும் போது வெளியில் வரும். ஆதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
 
பொதுபலசோன, மற்றுமுள்ள இனவாத அமைப்புக்களினால் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பீடுகளை பொறுப்பேற்பது யார்? தத்தமது அரசியல் காய்நகர்தலுக்காக முஸ்லிம்களை இன்னுமின்னும் பலியாக்காதீர்கள். 

மாகாண சபை திருத்த சட்டமூலத்தக்கு ஆதரவளித்துவிட்டு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய வியாக்கியானம் மிகவும் கேலிக்கூத்தாகவிருந்தது. தங்கள் மீது ஆட்சியாளர்கள் சுமத்திய அபாண்டத்தை சமாளிக்க முயற்சித்தார்களே தவிர , இந்நாட்டில் சிதறி வாழும் முஸ்லிம்களை இன்னுமோர் பர்மாவாக ஆக்க முயற்சிக்கும் இவ்வரசாங்கத்தின் திருகுதாளத்தை புரிந்துகொள்ள முடியாமல் போன அரசியல் ஞானத்தைப் பற்றி என்னவென்று சொல்வது. 

இந்த விடயங்கள் ஜம்இய்யத்துல் உலமா, ஆசாத் சாலி போன்றவர்களi விட நன்கு அதிகமாக தெரிந்தவர் என்.எம். அமீன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனை மீட்க எந்த முயற்சியும் இவர்கள் எடுக்கவில்லை. மேற்சொன்ன விவகாரங்களுக்கு கொடுத்த முக்கியதுவத்தை விட. 
ரணில் பிரதமராக தொடர்ந்து பதவி வகிக்கவும், மைத்திரி தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதுக்கும், இப்போதுள்ள நாடாளுமன்றை இன்னும் ஐந்துவருடம் நீடித்து இந்த நாட்டில் மஹிந்தவுக்குள்ள செல்வாக்கை குறைக்கின்ற பணியையே இந்த அரசாங்கம் மேற்கொள்கின்றது. இந்த சதுரங்க விளையாட்டில் தமிழ் தரப்பு தங்களுக்கான உச்சபட்ச அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் முனைப்பை காட்டுகின்றது. ஆனால் பாவம் இந்த நாட்டிலுள்ள முஸலிம்கள். 

குறைந்த பட்சம் ஞானசாரவை சந்தித்த அதி புத்திஜீவிகள் முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் பற்றி ஏன் ஆட்சியாளர்களை சந்தித்து அழுத்தம் கொடுக்கவில்லை. என்கிற கேள்வி நியாயமானதே. 

மாகாண சபை திருத்த சட்டமூலம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் விபரிக்கவில்லை. கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் வெளிநடப்பு செய்ததை ஏன் தோலிருத்து காட்ட தவறியது. ஆகா மொத்தத்தில் இங்குள்ள முஸ்லிம்கள் எக்கேடுகெட்டாலும், தாமும் தத்தமது பதிவிகளும் முக்கியம் என்கிற குறுகிய சிந்தனை உங்கள் எல்லோரையும் ஆட்கொண்டுவிட்டது என்பது மட்டுமே உண்மை.  
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post