காதல் எனும் பெயரால் சீரழியும் முஸ்லிம் இளம் பெண்கள்; பெற்றோர்கள் அவதானம்பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம், தனியார் வகுப்புக்கள் இதர படிப்புகளுக்கு மாணவிகளை வெளியில் தனிமையில் அனுப்பும் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகள் யாருடன் கூட்டுச்சேருகின்றது, யாருடன் பழக்கம் வைத்துள்ளன மொபைல் பாவனை, தனிமை குறித்த சோதனை அனைத்தையும் அறிந்த வைத்திருத்தல் சாலச்சிறந்தது, காரணம் இன்று நவீன ஜாஹிலியா தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது.

காதல் என்ற வலையில் பெண்பிள்ளைகளை சிக்கவைத்து பின்னர் தனிமையில் சல்லாபமாய் இருந்துவிட்டு அல்லது சிறிய சிறிய சல்லாபங்களில் இருந்து அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பிள்ளைகளை பாலியலுக்கு பயன்படுத்து நாசகார வேலைகளை தற்பொழுது ஒரு குழு பொழுது போக்காக செய்து கொண்டிருக்கிறது, குறித்த பெண்பிள்ளைகளை திருமணத்திற்கு பின்னர் மிரட்டி புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிடுவோம் பணம் தாருங்கள் என்றும் ஒரு குறுாப் அலைகிறது.

இஸ்லாம் இதற்காகவே காதலை வெறுத்துள்ளது, பெண்கள் அமானிதம், இன்று கணவன் மார்களை வெளிநாட்டில் வைத்துவிட்டு மனைவிகளின் உள்ளுரா கள்ள தொடர்புகள், கணவன்மார்கள் வெளிநாட்டில் அந்நியப் பெண்களுடன் சல்லாபம் இவையெல்லாம் இன்று சர்வ சாதாரணமாய் போய்விட்டது, இதனை தடுப்பது நமது கடமை இதனை பகிரங்க வெளியில் பதிவிடலாமா? என்பது குறித்து சர்ச்சை எழும்பலாம் ஆனால் இவற்றை இங்கு பேசாமல் எங்கு பேசுவது? தயவு செய்து இதற்கு பின்னுாட்டங்கள் எழுதுங்கள், சிறந்த பின்னுாட்டங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படும்.