Oct 12, 2017

பொய் கூறிய அமீர் அலிக்கு ஹாபிழ் நசீர் அஹமட்டை விமர்சிக்க என்ன தகுதியுள்ளதுதான்  கட்சி  மாறினால்  சொந்த்த்  தாயுடன்  விபச்சாரம்  செய்தனைப் போலாவேன்  என மக்கள் முன்கூறிவிட்டு வேறு கட்சிக்கு தாவிய  பிரதியமைச்சர்  அமீர்  அலி மற்றவர்களைப்  பார்த்து பொய்க்காரன்  எனக்கூறுவது வேடிக்கையாகவுள்ளது என  கிழக்கு  மாகாண  சபை உறுப்பினர்  எம் லாஹிர் தெரிவித்தார்.
தனது சொந்த  ஊர் மக்கள்  முன் தன்னை  பத்து  மாதம்  சுமந்து  ஈன்றெடுத்த  தாயை கேவலப்படுத்தி பொய்கூறிய  ஒரு பொய்யர் அல் குர் ஆனை மனதில் சுமந்த ஒரு ஹாபிழை எவ்வாறு பொய்யரெனக் கூற முடியும் எனகிழக்கு மாகாண சபை உறுப்பினர்  லாஹிர் கேள்வியெழுப்பினார்.

பிரதியமைச்சர் அமீர் அலியின் கருத்து  குறித்து ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம் லாஹிர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லாஹிர்,

ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் இரண்டரை வருடங்களே கிழக்கின் முதலமைச்சராக இருந்த போதிலும் அவர்ஆற்றிய பணிகள் கடந்த 13 வருடங்களாக அமைச்சர்,பிரதியமைச்சர் என பல பதவிகளை வகித்த அமீர் அலியைகதி கலங்கச் செய்துள்ளது,
இன்று   மக்களிடம்  எதைப்பற்றி  பேசுவது  என்பது  தெரியாது  கடந்த 13 வருட அரசியலில் தமக்கே இயல்பானஅவதூறு  கூறும் படலத்தை இன்று  தொடர்ந்து  வருவது இது  போன்ற அரசியல்வாதிகள்  முஸ்லிம்சமூகத்துக்கு சாபக்கேடுகள் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது,

கிழக்கு  மாகாண  பட்டதாரிகள்  வீதியோரம் நின்று போராடிய போது  அவர்களுடன் படம் எடுத்து பாசாங்குகாட்டிய பிரதியமைச்சர் அமீர் அலிக்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டைவிமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் கிடையாது 

அரசாங்கத்திலும் பாராளுமன்றத்திலும் கதிரையை அலங்கரிப்பவராக அமீர் அலி இருந்த போது  முழுமையானஅதிகாரங்கள் கூட அற்ற மாகாண சபைியின் முதலமைச்சராக இருந்து பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பினை முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஏற்படுத்திக் கொடுத்தது


கிழக்கு மாாகாண முதலமைச்சர் அவர்கள் பட்டதாரிகளுக்கு  நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்காகமுன்னெடுத்த  முயற்சிகளை கிழக்கு மாகாண மக்கள் அறிவார்கள்.
அதனடிப்படையிலேயே இந்த  மாத ஆரம்பத்தில்  அவர்களுக்கான போட்டிப் பரீட்சைகள் இடம்பெற்று இந்த மாதநடுப்பகுதியில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன,
தமது  சொந்த மாாகாணத்தில் இடம்பெறுகின்ற விடயங்கள்  தொடர்பில்  பூரண அறிவில்லாத நீங்கள்பாராளுமன்றத்துக்கு சென்று எவ்வாறு  மாாகண  பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பீர்கள் என நம்பமுடியும்,

வௌிநாடுகளுக்கு பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்த வேண்டும் என்ற  கொள்கையோடு முன்னாள்கிழக்கு முதலமைச்சர் செயற்பட்டு வந்தார்,

அதற்காக அவர்  ஏறாவூர்,சம்மாந்துறை மற்றும் சீதனவௌி ஆகிய பகுதிகளில் ஆடைத் தொழிற்சாலைகளைநிறுவும் நடவடிக்கையை முன்னெடுத்தார்,
தற்போது  ஏறாவூரில் நிறுவப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் இன மத பேதமின்றி  யுவதிகள் மற்றும்பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள்,
கடந்த 13 வருட அரசியலில் ஒரு கொள்கையற்ற அரசியல்வாதியாக செயற்பட்டு வரும் உங்களை விட இரண்டுவருடங்களே முதலமைச்சராய் பதவி வகித்து  தனது  கொள்கையை அறிவித்து  அதற்கான நடவடிக்கைகளைமுன்னெடுத்தவர் பாராட்டப்பட  வேண்டியவரே அன்றி விமர்சிக்கப்பட வேண்டியவர் அல்ல,

கிழக்கு முதலமைச்சரினால்  முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை  திறந்து வைக்க பூரண உரிமைஅவருக்கு இருக்கின்றது,
ஆடிக்கொரு முறை  அமாவாசைக் கொருமுறை  வீதியொன்றுக்கு அடிக்கல் நாட்டு விழா மாத்திரம் தான் உங்கள்சாதனைப் பட்டியலாய் இருக்கலாம் ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் கிழக்கு  முதலமைச்சர் முன்னெடுத்த அபிவிருத்திகளினால் உங்கள் கையாலாகாத  தனத்தை எண்ணி உங்களுக்குள் எழும்வெறுப்புணர்ச்சியின் வௌிப்பாடே உங்கள் இந்தப் பேச்சுக்கள் என்பதை நாமறிவோம்.

ஆகவே உங்களுக்கு கிடைத்துள்ள பிரதியமைச்சர் பதவியை வைத்து மக்களுக்கு முடிந்த  சேவைகளை செய்யமுன்வருமாறு  உங்களை வேண்டிக் கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்லாஹிர் குறிப்பிட்டார்.


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post