பிரிண்டர் தொடக்கம் ஆட்டுக்குட்டி வரை; தொழிலுக்கு உதவும் சிப்லியும் பேஸ்புக்கும்!

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் இன் செயல்கள் கண்டு வியத்தோர் பலர் இருக்கின்றனர், அவரு நேர்மையும் அழகும் அனைவராலும் விரும்ப படக்கூடியது, காத்தான் குடியில் ஹிஸ்புல்லாதான் என்றிருக்கையில் இன்னுமொருவராய் அரசியலில் மிளர்ந்தார்.

மக்கள் தேவைகளை தன் சேவையாய் செய்யும் சிப்லி பாறுக் இன் அண்மைக்கால பேஸ்புக் பதிவுகள் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது, தான் உதவி செய்யும் புகைப்படங்களை சமூக வலையில் பதிவு செய்து வருகிறார் இது ஒருவகையில் சரியென்றாலும் இது சரிதான என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளது, ஒரு கை உதவுவதை மறு கை க்கு தெரியக்கூடாது என்று சொன்ன மார்க்கத்தை பின்பற்றும் நான் சின்ன உதவிகளை எல்லாவற்றையும் புகைப்படமாக பேஸ்புக்கில் பதிவேற்றுவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. ஆனால் சிப்லியின் நியாயம் எவ்வாறு இருக்கிறது என தெரியாது. இந்த பதிவிற்கு அவர் விளக்கம் தரவேண்டும் என்பது எங்கள் அவா.

அண்மையில் ஒரு நண்பருக்கு பிரிண்டர் ஒன்றை வாங்கி அவர் தொழில் முயற்சிக்கு உதவியதாக பதிவிட்டிருந்தார், அந்த நண்பர் அந்த புகைப்படத்தை ஸே்புக்கில் பார்த்தவுடன் என்ன நினைத்திருப்பார்? அவர் உறிவனர்கள்?


அது போல இன்னுமொருவருக்கு ஆடுவளர்க்க ஆட்டுக்குட்டிகள் தான் பெற்றுக் கொடுத்ததாகவும் பதிவிட்டுள்ளார், இந்த ஏழை இந்த புகைப்படத்தை பார்த்தால் அந்த நண்பர் என்ன நினைத்திருப்பார்.


சிந்திக்க வைக்கின்ற இந்த புகைப்படங்களை ஏன் பதிவிட வேண்டும், நீங்கள் ஏழைகளின் தோழர் என்பது எமக்கு தெரியும் இதற்கான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.