Oct 30, 2017

ஒரு நல்ல செய்திதெரிவிப்பாளனின் தகுதிகள்

ஒரு நல்ல செய்திதெரிவிப்பாளனின் தகுதிகள்
எல்லா செய்தியாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவனும் மதிக்கப்படுவனும் ஒரு செய்தி தெரிவிப்பாளனே ஆகும். ஒரு பத்திரிகையினுடைய நம்பகத்தன்மையும் புகழும் அதன் செய்திதெரிவிப்பாளர்களிலேயே பெருமளவு தங்கியுள்ளது.
செய்திகள் இரு வகைப்படும் : எதிர்பார்க்கப்பட்ட செய்திகள், எதிர்பாராத செய்திகள் என்பவையே அவை. சட்டசபைக் கூட்டத்தொடர், அரசியல் கூட்டங்கள், கருத்தரங்குகள் முதலிய முன்கூட்டியே தெரிந்திருக்கத்தக்க விடயங்கள் பற்றிய செய்திகள், எதிர்பார்க்கப்பட்ட செய்திகள் எனப்படும்.
கட்டிடம் இடிந்துவிழுதல், விமானவிபத்து முதலிய திடீரென நிகழும் சம்பவங்கள் பற்றிய செய்திகள் எதிர்பாராத செய்திகள் எனப்படும். எதிர்பாராத செய்திகள் உருவாகும் சந்தர்ப்பங்களில் ஒரு குறுகியகால அவகாசத்துடன் ஒரு செய்தி தெரிவிப்பாளன் ஸ்தலத்திற்கு அனுப்பப்படுகின்றான். ஒரு நல்ல செய்திதெரிவிப்பாளனின் தகுதிகள் பின்வருமாறு.
1. துல்லியத் தன்மை : ஒரு செய்திதெரிவிப்பாளன் சேதமடையாத சிதைவடையாத தகவல்களைப் பெறவேண்டும். ஊகங்களும் கவனயீனங்களும் பேராபத்திற்குக் கொண்டுசெல்லும். ஒரு செய்தி; தெரிவிப்பாளன் தொழில்சார் ரீதியாக, செய்திநிலை நோக்குக் கொண்டவனாக இருக்கவேண்டும். “முதலில் பெறவேண்டும், ஆனால் முதலில் சரியாகப் பெறவேண்டும்” என்ற வாசகத்தை மறக்கக்கூடாது.
2. ஒரு செய்திக் கதையை அடையாளம் காண்பதற்கான ஆற்றல். அதாவது செய்தியை மணந்து பிடிக்கும் மூக்கு.
3. ஒரு செய்தி பற்றிய தகவல்களையும் உண்மைகளையும் எங்கே கண்டுபிடிக்கலாம் என்பதை அறிந்திருத்தல்.
4. வளமும் தெளிவும் மிக்கவெளிப்படுத்துகை : எழுத்தாக்கத்திலும் உரையாடலிலும் நல்ல வகையில் செயற்படக்கூடியவராக நீங்கள் இருக்கவேண்டும். உங்கள் செய்திப்பணியில் நீங்கள் பலதரப்பாரையும் நேர்முகம்காண வேண்டியிருப்பதனால் உங்கள் உரையாடல் வல்லமையும் பேச்சாற்றலும் முக்கியமானவை.
5. பொருத்தமான மேற்கோள் காட்டல் : ஏனையவர்களால் தரப்படும் கூற்றுக்களை மேற்கோள் காட்டும்போது உங்கள் சுயகருத்துக்களை அதற்குள் சேர்க்கக்கூடாது. ஞாபகசக்தியில் இருந்து மேற்கோள் காட்ட முனையாதீர்கள். சந்தேகம் இருப்பின் பிறர்கூற்று வாக்கியமாக எழுதுங்கள்.
6. இயைபாக்கம் பெறும் அணுகுமுறை : நீங்கள் ஒரு மகிழ்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டிருக்கவேண்டும் என்பதுடன் பல்வேறுபட்ட மக்களையும் கையாளக்கூடிய பல்துறைசார் திறமையையும் விருத்திசெய்துகொள்ள வேண்டும்.
7. வேகம் : உயர் வேகத்தில் திறமையுடன் நீங்கள் வேலை செய்ய வேண்டும். அதேவேளை காலவரையறை பற்றிய அழுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகக் கூடாது. உங்களால் இயன்றளவு குறைந்த நேரத்திற்குள் விபத்துக்கள், அனர்த்தங்கள் பற்றிய செய்திகளை நீங்கள் சேகரிக்கவேண்டும்.
8. கண்டுபிடிக்கும் கெட்டித்தனம் :செய்தி சேகரிக்கும் நடைமுறையில் தனித்துவத்தைப் பேணுவதற்காகத் தொடர்ந்து இடையறாது பாடுபடுங்கள். அதிலும் புலனாய்வுச் செய்தி தெரிவிப்பில் (Investigative reporting) இது முக்கியமானது.
9. சிக்கலான விவகாரங்களை உள்வாங்கக்கூடிய திறமையிருத்தல்.
10. பெயர்களையும் முகவரிகளையும் உறுதியாகச் சரிபார்த்தல்.
11. புதிய புதிய செய்திமூலங்களை அறிந்துகொள்ளுதல்.
12. தொடர்புகளைக் கட்டியெழுப்பவேண்டும். நண்பர்களின் நீண்ட பட்டியல் ஒன்றைப் பேணுவதுடன், எவ்வகைச் செய்திகளை யாருடன் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம், விருத்திசெய்து கொள்ளலாம் என்பன போன்ற விடயங்களை அறிந்திருத்தல், அதிகாரப+ர்வ தகவல்களைத் தரத்தக்க நபர்களை அறிந்திருத்தல்.
13. ஒரு நகரச் செய்தி தெரிவிப்பாளருக்கு அந்தப்பிரதேசம் பற்றி ப+ரண அறிவு அவசியம்.
14. சொற்களைப் பிழையின்றி எழுதுவதிலும் பிரயோகிப்பதிலும், இலக்கணத்திலும் அறிவுள்ளவராக இருத்தல்.
15. ஒரு செய்தி தெரிவிப்பாளருக்குத் தேவையான ஏனைய தகுதிகள்.
மாற்றமுறும் காலநியதிகளுக்கு ஏற்ப பணியை முன்னெடுத்தல்.
உறுதிமிக்க சுயாதீனத்தன்மை.
நல்ல கண்பார்வையும் கேட்கும் திறனும்.
உறுதியான கால்கள்.
தட்டச்சு செய்யக்கூடியதாகவிருத்தல்.கணணிப் பிரயோக ஆற்றல்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post