அஷ்ரபின் உண்மைப்போராளி அதாஉல்லாதான்; சேனையூரில் அதாஉல்லா பேச்சு


ஸேக் மிசாரி 

மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் உண்மைப்போராளி நான்தான் என அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற விசேட விழிப்புக்கூட்டத்தில் உரையாற்றினார் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா,

இன்று மாலை ஆரம்பித்த விசேட விழிப்புக்கூட்டத்தில்  பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட ஏ.எல்.எம் அதாஉல்லா மேலும் உரையாற்றிய போது,

முஸ்லிம் காங்கிரசில் நாம் இணைந்தது எம்.பி பதவிகளுக்கோ அல்லது சுகபோகங்களுக்கு அல்ல, மாறாக எமது சுதந்திர சுவாசத்திற்காக, முஸ்லிம்களின் விடுதலைக்காக  ஆனால் தாம் பெற்ற விடுதலையை யாரோ சொந்தம் கொண்டாடுகின்றனர். யாரோ கட்சியின் சொந்தக்காரர்கள் எனச் சொல்லுகின்றனர், சிறுபான்மை மக்களை சுரண்டும் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாரத்தில் இருக்கிறார் அவரின் கைக்கூலிகளாக முஸ்லிம் தலைவர்கள் மாறிவிட்டனர்.

அன்று அஸ்ரப் சொன்னால் அவருடன் பயணிக்காதீர்கள் என்று, அந்த சொல்தான் எங்களுக்கு வாக்கு அந்த வாக்கே எமது அரசியல் இன்று புரிகிறதா ரணிலின் விளையாட்டு, இந்த விளையாட்டுக்களுக்கு தெசிய காங்கிரஸ் அடிபணியாது என்றார்.