முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய சமூக ஊடக செயலமர்வு (Photos Attached)

"சமூக ஊடகங்களை வினைத்திறனாக பயன்படுத்துவது எப்படி?" என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய செயலமர்வு கடந்த 30ஆம் திகதி சனிக்கிழமை இரத்மலானை CBSE கல்லூரியில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றினார். சமூக ஊடக ஆய்வாளர் நாலக குணவர்தன, ரோர் தமிழ் பிரதம ஆசிரியர் ரக்‌ஷானா சரீப்தீன், சமூக ஊடக பயிற்றுவிப்பாளர் தாரிக் அஸீஸ் மற்றும் றிஷாதா ஆகியோர் சமூக ஊடகங்கள் தொடர்பாக விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.

சமூக ஊடகங்களில் ஆவர்முள்ள இளைஞர், யுவதிகள் என சுமார் 50 பேர் இந்த செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பங்குபற்றிய அனைவருக்கும் இறுதியில் சான்றிதழ் வழங்கப்பட்டன.