அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பு குற்றப் பிரிவில்; பொலிசார் தீவிர விசாரணை #RMuslimsமியன்மார் ரோஹிங்யா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று குழப்பத்தை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பு குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் அவர் இன்று காலை கொழும்பு குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசை பகுதியில், மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று குழப்ப நிலையை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில், அக்மீமன தயாரத்ன தேரர் மற்றும் அரபேபொல ரதநசார தேரர் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அக்மீமன தயாரத்ன தேரர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ள போதிலும், ரதநசார தேரர் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.