மெல்ல மெல்ல மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறும் இலங்கை சமூகம்? #SLMUSLIMSஇலங்கை முஸ்லிம்கள் மேற்கத்திய கலாச்சார உடைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது, கலப்பு கலாச்சாரத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கென உடைக நடைமுறை ஏனைய வாழ்வியல் நடைமுறைகளை கொண்டிருக்கவில்லை.

இவைகள் எதிர்காலத்திற்கு உகந்தவையாக கருதப்படாது, நமக்கான அடையாளத்தை நாம் மீண்டும் மீண்டும் இழந்து விட்டு பிற்பாடு நமக்கான உரிமையை தேடுவது பிழையானதாகும். நாம் இந்த நாட்டின் ஆதி குடிகள் என்ற அடிப்படையில் நமக்கான தனியொரு கலாச்சாரத்தை நாம் உருவாக்கி கொள்ளல் வேண்டும், உடை நடைமுறை இதற்கு பெரும் சான்றாக அமையும்.

முஸ்லிம் என்று ஏனையயவர்களிடம் இருந்து பெயரளவில் வேறுபடும் நாம், ஏனைய சமூகத்தவர் போல நாமும் மதது அருந்துதல், கிளப் க்கு செல்லுதல், மசாஜ் சென்றர் செல்லுதல், மியூசிக் சோ பார்க்க செல்லுதல், தியேட்டருக்கு செல்லுதல், புகைத்தல் பாவனை என்று நம்மில் ஆயிரம் குற்றங்களை வைத்திருக்கிறோம்.

பாவங்கள் அதிகரிக்கும் போது இறைவனின் சோதனை நம்மை வந்தடைகிறது, இலகுவான இஸ்லாமியத்தை கடினமாக பார்ப்பதே இன்றைய கால வரலாற்று பிழையாகும், சீதனம் - வட்டி - விபச்சாரம் தலைவிரித்தாடுகிறது இதனை கண்டிக்க மி்ம்பர்கள் இல்லை. ஆனால் பிழைகளை மூடிமறைக்க ஆயிரம் சபைகள். நாம் நாமாக திருந்தாதவரை நமக்கான அடையாளம் அழிந்து போகும்