Nov 22, 2017

கிந்­தோட்டை வன்­மு­றை­களின் போது 127 சம்­ப­வங்கள் பதிவு


காலி கிந்­தோட்டை பகு­தியில் சிங்­கள முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட முறுகல் நிலைமை வன்­மு­றை­யாக மாறி­யதால் மொத்­த­மாக 127 அசம்­பா­வித சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. பொலிஸ் விசா­ர­ணைகள் ஊடாக இவை தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர  தெரி­வித்தார். இந்­நி­லையில் இவை தொடர்பில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன அழ­கக்­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டில் இடம்­பெறும் விஷேட விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் இந்தச் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் கைது செய்­யப்­ப­டுவர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
இத­னி­டையே கிந்­தோட்­டையில் நில­விய பதற்றம் மற்றும் பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஆகி­யன கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில் அப்­ப­கு­தியின் பாது­காப்­புக்கு சிறப்­புத்­திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி கிந்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட  கிந்­தோட்டை மேற்கு, கிந்­தோட்டை கிழக்கு, குருந்­து­வந்த, மஹ­ஹப்­பு­கல, வெலி­பிட்டி, மோதர, உக்­வத்த, பிய­தி­கம ஆகிய 7 கிரா­ம­சே­வகர் பிரி­வு­களும் மூன்று வல­யங்­க­ளுக்குள் உள்­ள­டங்கும் வகையில் பிரிக்­கப்­பட்டு ஒவ்­வொரு வல­யத்தின் பாது­காப்பும் ஒரு உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் பொறுப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.  
அதன்­படி கிந்­தோட்டை பகு­தியில் நேற்று மாலை ஆகும்­போதும், 102 கடற்­ப­டை­யினர், 74 இரா­ணு­வத்­தினர், 428 பொலிஸார் மற்றும் 100 அதி­ரடிப் படை­யினர் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்தப் பட்­டி­ருந்­தனர்.
இத­னி­டையே கிந்­தோட்டை வன்­மு­றைகள் இடம்­பெற முன்­ன­ரேயே அவற்றைத் தடுத்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருந்தும் அவை தவ­ற­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எப்.யூ. பெர்­ணான்­டோவின் மேற்­பார்­வையில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன அழ­கக்­கோனின் கட்­டுப்­பாட்டில் இடம்­பெறும் சிறப்பு விசா­ர­ணை­க­ளி­லேயே இது தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அதன்­படி கிந்­தோட்டை வன்­மு­றை­களின் போது சிங்­கள, முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்குச் சொந்­த­மான 81 வீடுகள், 18 வர்த்­தக நிலை­யங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் 6 முச்­சக்­கர வண்­டி­களும், ஒரு லொறியும், வேன் ஒன்றும்,  8 மோட்டார் சைக்­கிள்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­விட நான்கு பள்­ளி­வா­சல்­களும் இதன்­போது தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன் 8 திருட்டுச் சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.
அதன்­ப­டியே மொத்­த­மாக கிந்­தோட்டை வன்­மு­றை­களில் 127 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.
இத­னை­விட சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக மோதலைத் தூண்டும் வகை­யி­லான பதி­வு­களை இடு­வோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் கணினிக் குற்றங்கள் பிரிவும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக (ஆரம்ப சம்பவங்கள் உட்பட) 22 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.எப்.எம்.பஷீர்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network