கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த விமானம் தரையிறக்கம்! உயிர்தப்பிய 138 பயணிகள்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று சிறிது நேரத்தில் மீண்டும் தரைக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

138 பயணிகளுடன் நேற்றிரவு  பயணத்தை ஆரம்பித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. 138 பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே மீள தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 11. 30 இற்கு பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றுமொரு விமானத்தினூடாக இன்று அதிகாலை மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.