35 மில்லியன் செலவில் சாய்ந்தமருதில் அபிவிருத்திப்பணி!!

-எம்.வை.அமீர் -
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சினூடாக சாய்ந்தமருதில் முன்னெடுக்கப்படும் பாரிய தோணா அபிவிருத்தித் திட்டத்தின் முதாலம் கட்ட இரண்டாம் பிரிவு வேலைத்திட்டம் 35,334,500.00 செலவில் 2017-11-05 ஆம் திகதி ஆரம்பமாகியது.
2016.10.11 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்காக 16 கோடி 20 லட்சம் ரூபாய்களை செலவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதில் கடந்த ஆண்டு 29,997,750.00 ரூபாய்கள் செலவு செய்து குறிப்பிட்ட தூரங்களுக்கு இரு மருங்கிலும் கல் சுவர்கள் அமைக்கப்பட்டன. இதன் அடுத்த கட்ட பணிகளுக்கே மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை காணிமீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் இவ்வருட இறுதிக்குள் நிறைவுபெறவுள்ளது.