நைஜீரியா மஸ்ஜிதில் தற்கொலைப் படை தாக்குதல்: 50-க்கும் அதிகமானவர்கள் பலிநைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்த தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மாலைமலர்