நாளொன்றுக்கு ஒரு பில்லியன் நட்டம்வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்படுவதனால் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா வரையில் நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைகள் மற்றும் மேல்மாகாண அவிபிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்தின் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அதிசொகுசு இலகுரக தொடரூந்துக்கான வீதி கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் பொருட்டு கொரியாவின் சுங் யங் நிறுவனத்துடன் கொழும்பில் வைத்து நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...