பசீருக்கு என்ன புதுசா ஞானம் வந்திருக்கு; அம்மா பேரியல் கடும் கேள்வி!''எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக 17 வரு­டங்­களின் பின்பு ஏன் திடீ­ரென தேடு­கி­றார்கள்? எனக்குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. இத்­தனை காலம் அமைச்சுப் பத­வி­க­ளிலும் அர­சாங்­கத்தின் உயர் பத­வி­க­ளிலும் இருந்த அவர்கள் அப்­போது இது தொடர்­பாக ஏன் தேடிப்­பார்க்­க­வில்லை?'' என கேள்­வி­யெ­ழுப்­பினார் முன்னாள் அமைச்­சரும், மர்ஹூம் அஷ்­ரபின் துணை­வி­யா­ரு­மான பேரியல் அஷ்ரப்.
மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் மர­ண­மா­ன­தை­ய­டுத்து விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­தி­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் முயன்­ற­போது அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது. பின்பு தகவல் அறியும் ஆணைக்­கு­ழுவில் இது தொடர்பில் மேன்­மு­றை­யீடு செய்­த­போது குறித்த அறிக்கை தேசிய சுவ­டிகள் காப்­ப­கத்­தி­லி­ருந்து காணாமற் போயுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
“மர்ஹூம் அஷ்­ரபின் மர­ணத்­துக்­கான கார­ணத்­தையும் அதன் பின்­ன­ணி­யையும் இப்­போது தேடு­ப­வர்கள் அவர்கள் பத­வி­களில் இருந்­த­போது தேடி­யி­ருந்தால் இர­க­சி­யங்கள் வெளிப்­பட்­டி­ருக்கும். ஏன் இப்­போது திடீரெனத் தேடு­வ­தற்­கான அவ­சியம் ஏற்­பட்­டது. அவரின் மரணம் ஏற்­ப­டுத்­திய அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீண்­டி­ருக்கும் எனக்கும் எனது மக­னுக்கும் இது கஷ்­ட­மாக இருக்­கி­றது.
17 வரு­டங்­களின் பின்பு பழைய கதை­க­ளையும் சம்­ப­வங்­க­ளையும் கிண்டி எடுக்க வேண்­டிய நோக்கம் என்ன? அவர்­க­ளுக்குத் தெரிந்த இர­க­சி­யங்கள் ஏதும் இருக்­கின்­ற­னவா என்­பது தெரி­ய­வில்லை.
அனைத்து விட­யங்­களும் அப்­போ­தைய ஜனா­தி­ப­தியின் காலத்தில் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் முன்னால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 17 வரு­டங்­களின் பின் இதனைத் தேடிப்­பார்த்து என்ன செய்­யப்­போ­கி­றார்கள்? இதன் நோக்கம் என்ன ? என்றார்.
மர்ஹும் அஷ்ரப் பய­ணித்த ஹெலி­கொப்டர் 2000 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16 ஆம் திகதி அர­நா­யக்க, குமா­ர­புர, ஊரா­கந்த மலைப் பிர­தே­சத்தில் விபத்­துக்­குள்­ளா­கி­யது. விபத்தில் அஷ்ரப் உட்­பட 15 பேர் பலி­யா­னார்கள்.
இந்த விபத்து தொடர்பில் விசா­ரணை நடாத்தி அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்க நீதி­பதி எல்.கே.ஜி.வீர­சே­கர தலை­மையில் ஆணைக்குழு ஒன்றினை நியமித்தார். ஆணைக்குழுவின் அறிக்கை 2017  ஜனவரி மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுவடிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து அறிக்கை காணாமற் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - விடிவெள்ளி
பசீருக்கு என்ன புதுசா ஞானம் வந்திருக்கு; அம்மா பேரியல் கடும் கேள்வி! பசீருக்கு என்ன புதுசா ஞானம் வந்திருக்கு; அம்மா பேரியல் கடும் கேள்வி! Reviewed by NEWS on November 13, 2017 Rating: 5