Nov 29, 2017

கிழக்கு முஸ்லிம்களைஅரசியல் அந்தகாரம் சூழுகிறதா?- எம்.வை.ஏ. அஸீஸ்மொத்ததேசத்தின் அரசியலில் ஆர்வமாய் இருந்துதமக்கானதனித்துவஅரசியல் தீர்வுக்கானஆக்கபூர்வமானஆலோசனைகளைஅனைவரும் ஒன்றிணைந்துசெய்திருக்கவேண்டியவர்கள்தான் கிழக்கு முஸ்லிம்கள். ஆனால்,அவர்கள் தமதுநாட்டுப்புறத்துஅரசியலையும் தலைமைத்துவவேட்கையையும் தலையில் தூக்கிப்பிடித்துள்ளமைகிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலமொத்தஅபிலாiஷகளுக்குமீட்டெடுக்கமுடியாதபாதிப்புகளைஏற்படுத்தும் என்பதுதிண்ணம்.

தமக்கென்றுஒருஊரும்,ஊருக்கென்றுஒருரசாவுமேகிழக்குமாகாணபெரும்பான்மை முஸ்லிம்களின் அரசியலாகமாறியுள்ளமைபாரியசமுகபின்னடைவுக்கே இழுத்துச் செல்லும்.

இதுவரையில் எந்தவொருகட்சியும் வட-கிழக்கு முஸ்லிம்களுக்கானஅதிகாரபரவலாக்கம்,அதிகாரஅலகுதொடர்பாகஎதுவிதஆலோசனைகளையும் அரசியலமைப்புதீர்வுயோசனைக்குழுவுக்குமுன்வைத்திருக்கவில்லை. இதுவட-கிழக்கு முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனியவேண்டியவிவகாரமாகும்.

அதிகாரத்திலுள்ளமக்கள் காங்கிரஸும் (ம.கா.),அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதேசியகாங்கிரஸும் (தே.கா.) கிழக்குப் பிரிவனைவாதிகளாக இருக்கின்றனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் (மு.கா.) வடக்குகிழக்கு இணைப்புக்குஎதிரானதில்லையென்றுஅறிவித்துள்ளது. இதுஒன்றுக்குமற்றதுஎதிரானநிலைப்பாடுகளாகும். மு.கா. வை விட்டுவெளியேறிய,வெளியேற்றப்பட்டஉதிரிகளின் தூய முஸ்லிம் காங்கிரஸ் (தூ.ம.கா.) இனப்பிரச்சினைதீர்வுதொடர்பில் திக்குதிசையற்றதாகவேதெரிகிறது. இவைதான் கிழக்கு முஸ்லிம்களின் தீர்வுதொடர்பாகஅறியப்பட்டுள்ளவிடயங்களாகும்.

அவர்கள் அனைவரினதும் ஒட்டுமொத்தவிருப்பமோமு.கா. தலைமையைபடி இறக்கிவிரட்டுவதாகும். அதனால், தூ.மு.கா. ஏற்படுத்தமுற்படும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்புக்கும.கா. ஆதரவுதெரிவித்துள்ளதாகவும்,தே.கா.வோ ஷஎன் வழி தனிவழி!| என்று இணங்கமறுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தே.கா. வுக்கு கூட்டமைப்பின் தலைமைப் பதவிகொடுக்கப்படுமானால்,தற்சமயத்திற்குஅதுதான் கால் வைத்துள்ள இரட்டைத் தோணிபயணத்திற்குஉள்ளூர் தேர்தல் வரை இடைவேளைகொடுத்துஒருஆட்டம் ஆடிப்பார்க்கதே.கா. தயாராகவிருக்கும். ஆனால், கூட்டமைப்பில் ம.கா. இணைவதுஉறுதிப்படுத்தப்படும்போது கூட்டமைப்பின் தலைமைத்துவதத்திற்கானதகுதி,அந்தஸ்து ம.கா.வையேசேரும்.

எனினும், கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் ம.கா.வுக்கு இஷ;டம் இருப்பதாகத் தெரியவில்லை. தூ.மு.கா.வின் ஹஸன் அலியை முஸ்லிம் தேசிய கூட்டமைப்புக்கும.கா. வேபிரேரித்திருப்பதும் தெரிகிறது. ம.கா. வையும்,தே.கா. வையும் ஒன்றாகசேர்த்துக்கொள்ளமுடியாமல் போனாலும் கூட பரவாயில்லை,ம.கா.வுடன் மட்டுமாவது கூட்டுச்சேர்ந்தேஆகவேவேண்டியமரணாவஸ்தை கூ.மு.கா. வுக்கு இருக்கிறது. ஏனெனில்,ஒருஉள்ளூராட்சிதேர்தலுக்குதன்னந்தனியாகமுகம் கொடுக்கக் கூடியதத்துவமோ,தைரியமோ தூ.ம.கா.வுக்குக் கிடையாது.

முஸ்லிம் கூட்டமைப்புத் தலைமைப் பதவியைவிட இந்தக் கூட்டமைப்புபாராளுமன்றத் தேர்தல்களைசந்திக்கும் வரைநீடிக்கும் போது,அதன் விளைவாக முஸ்லிம் சமுகத்தின் தலைமைப் பதவியைம.கா. பெற்றுக் கொள்வதுசாத்தியத்திலுள்ளது. அதுதான் ம.கா.வின் இறுதி இலட்சியமாகவும் இருக்கிறது. மற்றவைஎல்லாவற்றையும் ஆண்டுஅனுபவித்துபார்த்தாயிற்று.

அம்பாறையில் பலதும்,மட்டக்களப்பில் ஒன்றும்,திருகோணமலையில் இரண்டும் என்றும.கா.வின் பெரும் பங்களிப்புடன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்புஉள்ளூர் சபைகளைவென்றெடுக்கும் வாய்ப்புண்டு. இவைகளோடுதே.கா.வும் சேர்ந்துகொண்டால் மேலதிகமாக இன்னும் ஓரிருசபைகளையும் வென்றெடுத்துக் கொள்ள இயலுமானதாய் இருக்கும்.

இந்தநிலைமைக்குதே.கா.வின் கூட்டுச் சேர்க்கைஉதவியாய் இருக்கும். ஆயினும், இந்தஉள்ளூர் சபைத் தேர்தல்களைதே.கா.,தத்திமிதித்துப் பாய்வதாகஎடுத்துக் கொள்ளவிருப்பதுதெரிகிறது. உள்ளூர் ஆட்சிதேர்தல்களில் தத்தி,மாகாணசபைத் தேர்தலில் மிதித்து,பாராளுமன்றதேர்தலில் பாய்ந்துமஹிந்தவின் வெற்றிக் கம்பத்தைஅடையவேதே.கா. கனவுகண்டுகொண்டிருப்பதனால் தே.கா. வைச் சேர்த்துக் கொள்ளும் முயற்சி தூ.மு.கா.வுக்குமுடியாமல் போகலாம். அதுஒருபுறத்திற்கும் இலாபமாக இருக்கப் போவதில்லை.

இவ்வாறானபெரும் களேபரநிலையைமு.கா. இதுவரைசந்தித்ததேயில்லை. இது ஒருபுதிரானவேள்வி. இலகுவாய் தட்டிக்கழிக்கக்கூடியஒன்றுமல்ல.

அதனால் என்னசெய்வதுஎன்பதுபற்றி இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் (மு.கா.) ஒருமுடிவுக்குவரவில்லை. மட்டுமல்லாதுமு.கா. தலைமைக்கு இது கரணம் தப்பினால் மரணம் என்பதுவும் தெரியாததல்ல. சாதகமாகத் தென்படும் சரியானபோக்கைக்கூட நடைமுறைப்படுத்திக் கொள்ளமுடியாததர்மசங்கடத்திலும்,தன்னாதிக்கசரிவிலும் மு.கா. தலைமைதிக்குமுக்காடிக் கொண்டிருப்பதுதெரிகிறது.

முஸ்லிம் தலைமைத்துவத்தைக் குறிவைத்துள்ளம.கா. தலைமை, இந்த முஸ்லிம் கூட்டமைப்பின் பஞ்சாயத்தில் ஒருபக்கசார்பானதீர்பையே முஸ்லிம்களிடம் எதிர்பார்த்துசெயலாற்றப் போகிறது. மு.கா. தலையின் முடிவுக்குவால்களைபங்காளிகளாக்கிக் கொண்டுள்ளதால் மு.கா. தலைமைபாரியசிக்கலில் மாட்டிக்கொள்ளும் சாத்தியமேஉண்டு. அதற்குப் பின்னர்தலைமைப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதுதருமமாய் இராது. கௌரவமாய் இராஜினாமாசெய்யவேண்டியிருக்கும். மு.கா. தலைமையைவெளியேற்றகங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தூ.ம.கா. வுக்கும.கா.வின் தயவால் இதனைசாதிக்கசந்தர்ப்பம் உண்டு.

கிழக்குக்கானதனித்த முஸ்லிம் அதிகாரஅலகும், முஸ்லிம்களுக்கானதனித்தபிரத்தியேகஅதிகாரபரவலாக்கலுக்குமானகொள்கைபிரகடனமும்,பிரசாரஉத்திகளில் விவேகமும்,வேகமும் தான் மு.கா.வைக் காப்பாற்றும் கடைசிதுரும்புகளாக இருக்கும். எதற்கும் இன்னும் சொற்பகாலம்தான் இருக்கிறது. பண்டுமுளைப்பதுஅரிசியேஆனாலும் விண்டுஉமிபோனால் முளையாதாம்! என்பதைமு.கா. தலைமைபுரிந்துகொண்டால் சரி.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network