தேசிய ரீதியில் முதலிடம்! சம்மாந்துறை மாணவன் சகீப் ஹம்தான் சாதனை!!எம்.வை.அமீர் 

தேசிய மீலாதுன் நபி-2017 விழாவுக்கான அகில இலங்கை ரீதியான போட்டி நிகழ்ச்சிகளில்,ஆரம்ப பிரிவுக்கான பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை தாருல் உலூம் வித்தியாலய மாணவன் எம்.எம்.சகீப் ஹம்தான் முதலிடம் பெற்று தனது பாடசாலைக்கும், வலயத்துக்கும், மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏ.ஆர்.எம்.மாஹீர் (உதவிப் பதிவாளர்,தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) மற்றும்  ஏ.எல்.ஜெஸ்மின் ஷிஹானா ஆசிரியை ஆகியோரின் புதல்வனாகிய சகீப் ஹம்தான் அண்மையில் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைதுள்ளதுடன் பல விளையாட்டுப்போட்டிகளிலும் ஏனைய பல போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இவரை பாடசாலை சமூகம் வாழ்த்துகின்ற வேளையில் நாமும் வாழ்த்துகின்றோம்.