சுனாமி வதந்தி பொய்யானது; மக்கள் அவதானம்சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் சுனாமி வந்திருக்கின்றது என வதந்தி ஒன்று பரவலாக பேசப்படும் நிலையில் இது தொடர்பாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கும் தகவல் பின்வருமாறு...

குறித்த பிரதேசங்களில் கடலோரங்களில் உள்ள நீர்மட்டம் சற்று குறைந்திருக்கிறது. கடல் சற்று கொந்தளிப்பாக காணப்பட்டாலும் சுனாமி ஏற்படவில்லை என குறிப்பிட்டனர். என்றாலும் கூட மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.