முஸ்லிம்கள் மிக நிதானமாக நடந்து கொள்ளும் காலம் இது; என்.எம் அமீன் கருத்து!


கிந்தொட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம்கள் நிதானமாகவும் அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பொய்யான வதந்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சிறு விபத்துச் சம்பவம் ஒன்றின் அடியாக அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்களும் இது விடயத்தில் கூடுதல் கவனத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எந்தவொரு சம்பவத்திலும் சில தீய சக்திகள் குளிர்காய சந்தர்ப்பம் பார்த்துள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
இந்நாட்டில் நாம் சிங்கள சகோதர மக்களுடன் மிகவும் புரிந்துணர்வுடனும் சகவாழ்வுடனும் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றோம். இதனைக் குழப்பி சில குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்ள முஸ்லிம்கள் இடமளிக்கக் கூடாது. பொறுமையுடனும் அமைதியாகவும் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி நிதானமாக நடந்துகொள்வது இப்படியான சூழ்நிலையில் அனைவரினதும் தார்மீக பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.