மலசல கூடம் இருந்தும் இல்லாத நிலை நகரசபையின் கவனத்திற்கு!!!




(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி பிரதான பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அவசியத் தேவையாக காணப்பட்ட பொது மலசல கூடம் 2,250,000.00 செலவில் நிர்மானிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் மக்கள் பாவனைக்கு பயண்படுத்தப்படாத ஒன்றாகவே கானப்படுகிறது..

நாட்டின் நாலாபக்கம்களில் இருந்து வரும் பயணிகள் மலசல கூடம் ஒன்றின் தேவைக்காக பல இன்னல்களையும் சிரமங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
தற்போது பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து புதிய மலசல கூடம் அமைத்தும் எவ்வித பயனும் இன்றி காணப்படுகிறது..

இது தொடர்பில் காத்தான்குடி நகரசபை செயலாளர், காத்தான்குடி அரசியல் சமய தலைமைகள்,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பொதுமக்கள்  வேண்டுகோள்   விடுக்கின்றனர்.