Nov 24, 2017

கிந்தோட்டையில் அமைதி!


காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­களைத் தொடர்ந்து கடந்த ஓரிரு தினங்­க­ளாக அங்கு அமைதி திரும்­பி­யுள்­ள­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர். எனினும் அப் பிர­தே­சத்தில் தொடர்ந்தும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 
இந்த அசம்­பா­வி­தங்கள் கார­ண­மாக 5 பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் 22 பேர் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
அத்­துடன் வன்­மு­றைகள் கார­ண­மாக 81 வீடு­களும் 18 வர்த்­தக நிலை­யங்­க­ளும் சேத­ம­டைந்­துள்­ளன. மேலும் 6 முச்­சக்­கர வண்­டி­களும் ஒரு லொறியும் வேன் ஒன்றும்  8 மோட்டார் சைக்­கிள்­களும் தாக்­கியும் எரித்தும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நான்கு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ள­துடன்  8 திருட்டு சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்­டுள்ள புள்­ளி­வி­ப­ரங்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்­கி­டையில் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டி­க­ளுக்கு கூட்­டாக முகங்­கொ­டுக்கும் வகையில் கிந்­தோட்டை பிர­தே­சத்தை மையப்­ப­டுத்தி அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் ஒன்று அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதன் மூல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இழப்­பு­களை முறை­யாக பதிவு செய்து ஆவ­ணப்­ப­டுத்­து­வ­தற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கைகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அமைப்பின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஹிபிஷி (கபூரி) 'விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்தார்.
கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கள நிலை­வ­ரங்கள் மற்றும் தமது அமைப்பின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், அசம்­பா­வி­தங்­களால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இழப்­புகள் தொடர்­பான பதி­வு­களை நாம் மேற்­கொண்­டுள்ளோம்.
எமது அமைப்பின் உறுப்­பி­னர்கள் பாதிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு நேர­டி­யாகச் சென்று சேத விப­ரங்­களை பதிவு செய்­துள்­ளனர். இதே­போன்று அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் சமூக சேவைப் பிரி­வி­ன­ருக்கும் இந்த விப­ரங்­களை கைய­ளித்­துள்ளோம்.
பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் நஷ்­ட­யீடு வழங்­கப்­படும் என பிர­த­மரும் அமைச்­சர்­களும் உறு­தி­ய­ளித்­துள்ள போதிலும் இது­வரை கிராம சேவ­கர்­களோ, பிர­தேச செய­லக அதி­கா­ரி­களோ பாதிக்­கப்­பட்ட இடங்­களைப் பார்­வை­யி­டவோ சேத விப­ரங்­களைப் பதி­யவோ இல்லை. மக்கள் அதி­கா­ரி­களின் வரு­கைக்­காக காத்­தி­ருக்­கி­றார்கள்.
இதே­வேளை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சட்ட உத­வி­களை வழங்கும் நோக்கில் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வி­னரும் எமது பிர­தே­சத்­துக்கு வருகை தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். 
நாம் கிந்­தோட்டை பிர­தேச அகில இலங்கை ஜம்­இய்­யதுல்  உல­மா­வுடன் இணைந்து  தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் திட்­ட­மிடல் அமர்­வு­க­ளையும் நடாத்தி வரு­கிறோம். 
பிர­தே­சத்தில் தற்­போது அமைதி நில­வு­கி­றது.எனினும் இரவு வேளை­களில் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
துர­திஷ்­ட­வ­ச­மாக மக்கள் மத்­தியில் இன்­னமும் வதந்­திகள் பர­விய வண்­ணமே உள்­ளன.  இதனால் இரவு வேளை­களில் மக்கள் மத்­தியில் சற்று அச்சம் நில­வு­வ­தையும் காண முடி­கி­றது என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.
இதற்­கி­டையில் நேற்­றைய தினம் காலி, மிலிந்­துவ பகு­தியில் முஸ்லிம் வீடொன்­றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் அங்கிருந்த பெண் ஒருவரை தாக்கி வீட்டைத் தீ வைத்துக் கொளுத்த முற்பட்ட சம்பவம் பிரதேசத்தில் மீண்டும் பதற்றத்தையும் சலசலப்பையும் தோற்றுவித்திருந்தது. எனினும் குறித்த சம்பவமானது தனிப்பட்ட விவகாரம் ஒன்றுடன் தொடர்பானது எனவும் இதற்கும் இன முறுகல்களுக்கும் தொடர்பில்லை எனவும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.