தேர்தல்கள் தள்ளி வைக்கப்படுவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கவலை


தேர்தல் நடாத்துவது தொடர்பில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை கவலையளிப்பதாகவும் அதிருப்தியுடன் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும், அதன்போது எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய செயற்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தனக்கு செய்வதற்கு எதுவும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (22) இடைக்கால தடை  உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்