வடக்கு செல்லும் அதாஉல்லாக்கு வட்டமடு பேராட்டத்திற்கு வரமுடியாதா?


போராட்ட தளத்திலிருந்து இர்ஷாத்

வடக்கு சென்று அரசியல் பணிகளை மும்முரமாக செய்துவரும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஏன் கடந்த 22 நாட்களாக விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்ட தளத்திற்கு இன்னும் வரவில்லை என அன்வர் நௌசாத் கேள்வியெழுப்பியுள்ளார்,

நேற்று விவசாயிகளிடம் சிறப்பு சந்திப்பொன்றை மேற்கொண்ட அரசியல் விமர்சகர் அன்வர் நௌசாத் பலவிடயங்கள் தொடர்பில் பேசினார்,

அக்கரைப்பற்று விவசாயிகள் பிரச்சினையாக இருந்த பொழுதிலும் ஊரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒரு கட்சியின் தலைவர் இந்த தளத்திற்கு வரவில்லை ஆனால் வடக்கிற்கும் தெற்கிற்கும் அரசியல் செய்ய புறப்பட்டு வாகன பெவனி செல்கிறார் இது மக்கள் பிரச்சினை இதனை கட்சிபேதமின்றி செய்து முடிக்க வேண்டும் என்றார்.