Nov 17, 2017

"பொரு­ளா­தா­ரத்தை சீர­ழிக்கும் சிறி­சே­ன-­விக்­கி­ர­ம­சிங்க" - மஹிந்த ராஜபக்ஷ


நாட்­டைத்­தொ­டர்ந்து கடன்­சு­மைக்குள் தள்ளும் பொரு­ளா­தா­ரத்தை சீர­ழிக்கும் சிறி­சே­ன-­ – விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் எமக்கு ஒத்­து­ழைக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சபையில் தெரி­வித்தார்.
 பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நடை­பெற்ற வரவு – செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான இறு­திநாள் மீதான விவா­தத்­தில் ­க­லந்து கொண்டு உரையாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 
அவர்  மேலும் உரை­யாற்­று­கையில், 
இந்த வரவு –செல­வுத்­திட்­டத்தின் மூலம் வரி வரு­மானம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வரி வரு­மானம் அதி­க­ரித்­த­மை­யினால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் பெருமை கொள்­கின்­றனர். நாட்டு மக்கள் மீது வரி க்கு மேல் வரி விதித்­த­மை­யினால் நாட்டு மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் வாஷிங்­ட­னி­லுள்ள சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள் ஆனந்­த­ம­டையும். 
2014 ஆம் ஆண்டில் எமது அர­சாங்­கத்தின் ஆட்­சியில் செலுத்­தி­ய­திலும் பார்க்க இரு மடங்கு அதி­க­மான வரியை 2018 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டி ஏற்­படும். அதேபோல்  அரச சேவை­க­ளுக்­கான கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. மக்­களின் பணத்தை சூறை­யாடும் இந்த அர­சாங்கம் அதி­க­ரிக்கும் வரி ஊடாக செய்­துள்ள அபி­வி­ருத்தி எதுவும் கிடை­யாது. விமா­ன­நி­லை­யம், துறை­மு­கம், தாமரைத் தாடகம் போன்ற எத­னையும் இவர்கள் அமைத்­தி­ருக்­க­வில்லை. 
ஜனா­தி­ப­திக்கும் அமைச்­சர்­க­ளுக்கும் புதிய வாகன கொள்­வ­ன­வுகள் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளன. பாரிய மோச­டி, வீண்­வி­ர­யங்கள் போன்­ற­வற்றில் இருந்து நாட்டை மீட்­ப­தற்கு எந்த திட்­டமும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. 
நாட்டு தலை­வர்கள் ஏனை­ய­வர்கள் மீது குற்­ற­ச்சாட்­டுக்­களை மட்­டுமே முன்­வைத்து வரு­கின்­றனர். இதனால் நாட்­டி­லுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிட்ட போவ­தில்லை. அரச சொத்­துக்கள் தனி­யா­ருக்கு விற்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக போரா­டுவோர் சிறையில் அடைக்­கப்­ப­டு­கின்­றனர். 
எமது நாட்டு காணி­களில் நினைத்­த­வாறு வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு அனு­மதி வழங்க வர­வு-­ – செ­ல­வுத்­திட்­டத்தில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அரச வளங்­களை குறைந்த விலைக்கு விற்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.
எமது நாட்டின் சொத்­துக்கள் எமது நாட்­டுக்கு மக்­க­ளுக்கே சொந்­த­மா­ன­வை­யாகும். 5 வரு­ட­ஆட்­சிக்கு வரும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அவற்றை விற்­கவோ குத்­த­கைக்கு வழங்­கவோ முடி­யாது.
நாட்டில் கடன் பொறியை ஏற்­ப­டுத்­தி­யது யார்? நவீன உலகில் கடன் பெறாத நாடோ அல்­லது நிறு­வ­னமோ கிடை­யாது. கடன் பெறு­வதை விட கடன் செலுத்தும் இய­லு­மையே இங்கு பிர­தா­ன­மா­ன­தாகும். 
எமது ஆட்­சியில் யுத்­தத்­திற்­கா­கவே கூடுதல் கடன் பெறப்­பட்­டது. 2009 ஆம் ஆண்டு முதல்  பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. யுத்­தத்தின் பின்னர் வடக்­கு­, ­கி­ழக்கில் பாரிய உட்­கட்­ட­மைப்பு வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. 
சிறி­சேன அர­சாங்­கமே எமது நாட்டை கடன் பொறியில் சிக்­க­வைத்­துள்­ளது. கடந்த இரண்­டரை வரு­டங்களில் பெற்ற கட­னா­ன­து 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரை பாரிய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ளப்­பட்ட 5 வருட காலத்தில் நாம் பெற்ற கடனில் 86  சத­வீ­த­மாகும்.இந்த ஆட்­சியில் கண்­ணுக்குத் தெரியும் எந்த அபி­வி­ருத்­தியும் நடக்­க­வில்லை.
2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை பொரு­ளா­தார வளர்ச்சி வேக­மா­னது 6.8 சத­வீ­த­மாக பேணப்­பட்­டது.2016 ஆம் ஆண்டில் இது 2.6 சத­வீ­தமே காணப்­பட்­டாலும் அர­சாங்கம் தவ­றான புள்­ளி­வி­ப­ரங்­களை முன்­வைக்­கி­றது.
இலங்­கையின் அந்­நிய செலா­வணி கையி­ருப்பு பெரு­ம­ளவு குறைந்­துள்­ளது. 2020 ஆம் ஆண்­டிலும் 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவே அந்­நிய செலா­வணி கையி­ருப்பு இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
தற்­போ­தைய ஆட்சி ஏற்­ப­டுத்­தி­யுள்ள கடன்பொறியில் இருந்து மீண்டு வரு­வது கடி­ன­மாகும். கடன் செலுத்த முடி­ய­வில்லை என்று நாம் எமது ஆட்­சியின் போது கண்ணீர் சிந்­த­வில்லை. உலக நிதி நிறு­வ­னங்­களின் சொற்­படி ஆட­வு­மில்லை. 
மக்­க­ளுக்கு வழங்கும் நிவா­ர­ணங்­களை குறைக்­காது பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­­யெ­ழுப்­பினோம். 30 வருட யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் வர­வு – -­செ­ல வுத் திட்ட துண்­டு­விழும் தொகையை கட்டம் கட்­ட­மாக குறைத்தோம். எந்த கட்­டுப்­பாடும் இன்றி சூறாவளியில் சிக்கியுள்ள படகாகவே தற்போதைய ஆட்சியை ஒப்பிட முடியும். இந்த மோசடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மக்களின் மனநிலையை உணர்ந்து அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது.விரைவில் தேர்தல் நடக்குமானால்  மக்களின் நிலைப்பாடு வெளியாகும்.ஆகவே நாட்டைதொடர்ந்து கடன்சுமைக்குள் தள்ளும் பொருளாதாரத்தை சீரழிக்கும் சிறிசேன – -விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீட்டு அனுப்ப நாட்டு மக்கள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post