திங்களன்று அக்கரைப்பற்றில் ஹர்த்தால்; ஒத்துழைக்குமாறு கோரிக்கை!!!எதிர்வரும் திங்கட்கிழமை அக்கரைப்பற்றை அண்டிய அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் கடைகளை மற்றும் அரச தனியார் நிறுவனங்களை மூடி எமது பேராட்டத்திற்கு விடிவு தேடிதருமாறு வட்டமடு விவசாயிகள் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறத்த கடிதத்தி்ல், இரண்டு வாரங்களுக்கு மேலாக அக்கரைப்ற்று நகரவிளிம்பில் தாங்கள் பேராட்டம் நடாத்தியபோது எந்தவொரு அரசியல்வாதியும் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, அரசியல் வாதிகள்தான் அப்படியென்றால் அராசங்க அதிபரும் அவ்வாறுதான் செயல்படுகிறார் என மிகுந்த கவலையுடன் குறிப்பிடுகின்றனர் வட்டமடு விவசாயிகள் கிட்டத்தட்ட 1500 ஏக்கள் விவசாய நிலங்களை பறிகொடுத்து விட்டு இன்று ஏழையாக வீதியில் இருக்கிறோம் இந்த போராட்ட விடிவிற்கு ஹர்த்தால் ஒன்றை எமது பிரதே முஸ்லிம்கள் செய்வதன் மூலம் அரசுக்கு புரியப்படுத்த முடியும். எனவே எதிர்வரும் 27.11.2017 திங்கள் ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.