காலியில் முஸ்லிம் நபரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
காலி மாநகரம் அருகே அமைந்துள்ள முஸ்லிம் வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டொன்று வீசப்பட்டுள்ளது.

காலியின் அருகே அமைந்துள்ள தூவ பிரதேசத்தின் சமகிவத்தை குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை காலியில் ஏற்பட்ட இன வன்முறைகளைத் தொடர்ந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் காரணமாக காலி மாவட்டத்தில் மீண்டும் அச்சமான சூழல் தோன்றியுள்ளது.

பெற்றோல் குண்டு சரிவர தீப்பற்ற முன்னர் அணைக்கப்பட்டதன் காரணமாக பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வலயம் அமைத்து பொதுமக்களை உட்பிரவேசிக்க விடாமல் தடுத்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.