வட்டமடு விவசாயிகளுக்கு செவிசாய்க்காமல் அரசியல்வாதிகள் துாக்கமா?


வட்டமடு விவசாயிகள் வீதிக்கு இறங்கி மாதமொன்று கடக்கவுள்ள நிலையில், அவர்கள் சாலை மறியலும், ஹர்த்தாலும் செய்து மனமுடைந்து இருக்கும் நிலையில் அரசியல்வாதிகள் எதனையும் பேசாது துாக்கிங்கொண்டு இருக்கிறார்களா என தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம் கேட்டுள்ளது,

வட்டமடு காணிகுறித்த இயக்கத்தி் ஊடக அறிக்கையில் குறித்த விடயம் பதிவிடபபட்டுள்ளது,

நிலமே எமது வாழ்வு என்றுள்ள பாவப்பட்ட விவசாயிகளுக்கு சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வக்கில்லாமல் பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கிகொண்டு இருக்கும் அரசியல்வாதிகள் வாக்குகளுக்கு மாத்திலம் மக்கள் மத்தியில் வந்து பிச்சை கேட்காமல் அவர்களின் துயரிலும் பங்கெடுத்து துயர் துடைக்க வேண்டும்.

முஸ்லிம்களின் பூர்வீக காணியான வட்டமடு காணியை மீட்பது முழு இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைக்கும் ஓர் அங்கீகாரம் ஆனால் அதனை செய்யாமல் இழுத்தடிப்பு செய்வது மிகுந்த கவலைக்குரியது.


ஜனாதிபதி, பிரதமர், காணி அபிவிருத்தியமைச்சர் உள்ளிட்மோர் இந்தவிடயத்தில் தலையிட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்,
தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்