வடகிழக்கில் மரச்சின்னத்தில் மு.கா தனித்துப்போட்டி; சவாலை எதிர்கொள்வோம்!ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவுகளின் படி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அந்த பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.