சுனாமியோ, சூறாவளி அபாயமோ கிடையாது; பயப்பட வேண்டாம்!! - அரசுசுனாமியோ, சூறாவளி அபாயமோ கிடையாது எனவும் மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா கோரியுள்ளார்.

ஊடகங்களின் ஊடாக அவர் இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…

எதிர்வரும் நாட்களில் நிலவக்கூடிய காலநிலை மாற்றங்கள் குறித்து தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
சில தரப்பினர் போலியான தகவல்களை வெளியிட்டு மக்களை பீதியடையச் செய்கின்றனர்.

சூறாவளி காற்றோ அல்லது சுனாமி அனர்த்தமோ ஏற்படக்கூடிய எவ்வித சாத்தியங்களும் கிடையாது.
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கால காலநிலை நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.