கிண்ணியாவில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்புதிருகோணமலை - கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு முன்னால் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்ரசிறி (வயது 50) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர் வீடொன்றில் தனிமையில் இருந்து குளிர்பானக் கடை நடத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சடலம் நீதவான் விசாரணைக்காக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிண்ணியா பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.