Nov 24, 2017

வட்டமடு குறித்து பேசிய டக்ளசுக்கு விவசாயிகள் பாராட்டு; நன்றி டக்ளஸ்!


வட்­ட­மடு விவ­சாயக் காணி பிரச்­சினை தொட­ர் பாக தொடர்ச்­சி­யாக விவ­சா­யிகள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இப்­பி­ரச்­சி­னையின் உண்மை நிலை என்ன என ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா சபையில் நேற்று கேள்வி எழுப்­பினார்.
இதே­வேளை, அம்­பா­றையில் ஐந்து விவ­சாயக் கண்­டங்­களைச் சேர்ந்த 1500 இற்கும் அதி­க­மான ஏக்கர் காணிகள் ஒதுக்­கு­வ­ன­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக 717 விவ­சாயக் குடும்­பங்கள் பாதிப்­ப­டைந்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 23 இன்கீழ் 2 இல் கேள்வி எழுப்­பு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தினார். 
அவர் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் உரை­யாற்­று­கையில், 
அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள வட்­ட­மடு, வேப்­பை­யடி, கொக்­கு­ழுவ, முறா­ண­வெட்டி, வட்­டு­மடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவ­சாய கண்­டங்­களைச் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்­பட்ட ஏக்கர் நிலப்­ப­ரப்பில் கடந்த 50 வரு­டங்­க­ளுக்கும் மேலாக சுமார் 717 குடும்­பத்­தினர் நெற்­பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்டு வந்­துள்­ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திக­தி­யையும், 1673/45ஆம் இலக்­கத்தைக் கொண்­ட­து­மான வர்த்­த­மானி அறி­வித்­தலின் மூல­மாக மேற்­படி காணி ஒதுக்கு வனம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அது முதற்­கொண்டு மேற்­படி விவ­சாய செய்­கை­யா­ளர்­க­ளுக்கு புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் சொற்ப காணி­களில் விவ­சாய செய்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு வாய்ப்­புகள் கிடைக்கப் பெற்­றாலும் வன  இலாகா­வினர் அதற்குத் தொடர்ந்தும் தடை­களை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­விக்­கின்­றார்கள். மேற்­படி 717 விவ­சாய குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் முன்­னெ­டுக்­கப்­படக் கூடிய ஏற்­பா­டுகள் எவை? அவ்­வாறு, மேற்­படி விவ­சாய மக்­க­ளுக்கு பாத­க­மற்ற வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மாயின் அதனை விரைந்து எடுத்து, செயற்­ப­டுத்த முடி­யுமா? என்றும் செய­லாளர் டக்ளஸ் தேவா­னந்தா கேள்வி எழுப்­பினார்.
மேற்­படி விவ­சாய மக்கள் கடந்த 2017.11.04ஆம் திகதி வட்­ட­மடு பகு­தியில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் இரண்டு தினங்கள் ஈடு­பட்டு, தங்­க­ளுக்­கான தீர்­வுகள் எட்­டப்­ப­டாத நிலையில் அப்­போ­ராட்­டத்­தினை அக்­க­ரைப்­பற்று நக­ருக்கு மாற்றி, அதைத் தொடர்ந்து வரு­கின்­றனர்.
மேற்­படி காணிகள், 333/3ஆம் இலக்க விவ­சாயக் காணிக்­கான அதி விசேட வர்த்­த­மானி மூல­மாக 1985 ஆம் ஆண்டு ஏப்­ரல மாதம் 04 ஆம் திகதி அக்­க­றைப்­பற்று கிழக்கு கம­நல சேவை நிலை­யத்தின் நிர்­வாக எல்­லை­யாக அறி­விக்­கப்­பட்டு, பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
விசேட காணிக் கச்­சேரி நடத்­தப்­பட்டு, 1979 முதல் 1985ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்­சி­யாக மேற்­படி விவ­சா­யி­க­ளுக்கு காணி அனு­மதிப் பத்­தி­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.  இக் காணிகள் தொடர்பில் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டும், 
அதன் தீர்ப்­புகள் மேற்­படி விவ­சாய மக்­க­ளுக்கே சாத­க­மாகத் தீர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேற்படி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மேற்படி காணி தொடர்பிலான பிரச்சினையின் உண்மை நிலை என்ன? என்பதை ஆராய்ந்து அந்த மக்களுக்கு உரிய தீர்வுகள் விரைவாகக் கிடைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவன செய்யவேண்டும் என்று அந்த மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network