Nov 1, 2017

கல்முனையையும் சாய்ந்தமருதையும் கூட்டிவிட்டு கூத்துப்பார்க்கும் அரசியல்!கல்­முனை மாந­கர சபையை நான்கு சபை­களாகப் பிரித்து சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான சபை வழங்­குங்கள் என்றும், சாய்ந்­த­ம­ருதை மாத்­திரம் கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து பிரித்து தனி­யான உள்­ளூ­ராட்சி சபை வழங்கக் கூடா­தென்றும் வலி­யு­றுத்தி நேற்று கல்­மு­னையில் அமைதிப் பேர­ணி­யொன்று இடம்­பெற்­றது.
இந்த இப்­பே­ர­ணியில் பெரு­ம­ளவில் பொது மக்கள், உல­மாக்கள், வர்த்­தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது ஆத­ரவை வழங்­கி­னர். அத்­துடன், கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் செய­லாளர் எச்.எம்.முஹம்­மட கனி­யிடம் கல்­மு­னை­குடி பெரிய பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் தலைவர் டாக்டர் அஸீஸ் மகஜர் ஒன்­றி­னையும் கைய­ளித்தார்.
இத­னி­டையே, கல்­முனை பிர­தே­சத்தில் இன்றும் நாளையும் கடை­ய­டைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்­டத்­துக்­காக  கல்­முனை அனைத்துப் பள்­ளி­வா­சல்கள் மற்றும் பொது நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம்  அழைப்பு விடுத்­துள்­ளது .
கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்
1987ஆம் ஆண்­டிற்கு முன்னர் கல்­மு­னையில் நான்கு சபைகள் காணப்­பட்­டன. கல்­முனை நக­ரத்தை மைய­மாகக் கொண்ட சபை கல்­முனை பட்­டின சபை என்று அழைக்­கப்­பட்­டது. இவ்­வாறு இருந்த சபை­களை எங்­க­ளிடம் கேட்­கா­ம­லேயே இர­வோடு இர­வாக கல்­முனை பிர­தேச சபை­யாக மாற்­றி­ய­மைத்­தார்கள். இது கல்­முனை முஸ்­லிம்­க­ளுக்கு செய்த மிகப் பெரிய அநி­யா­ய­மாகும். நாங்கள் சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை வழங்­கு­வ­தற்கு எதிர்ப்புக் காட்­ட­வில்லை. அவர்­க­ளுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி சபையை வழங்­குங்கள் என்­றுதான் கூறு­கின்றோம். கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­ந­க­ர­மாகும். இதனை இழப்­ப­தற்கு நாங்கள் தயா­ரில்லை. இவ்­வாறு நேற்று அம்­பாறை மாவட்ட பள்­ளி­வா­சல்கள் மற்றும் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனத் தலை­வரும், கல்­மு­னைக்­குடி ஜும்­ஆ ­பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் தலை­வ­ரு­மான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
கல்­முனை மாந­க­ரத்தை 1987ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்­தது போன்று நான்கு சபை­யாக மாற்­றுங்கள் என்­றுதான் கேட்­கின்றோம். முன்பு எங்­க­ளிடம் எதுவும் கேட்­காது செய்­ததைப் போன்று இத­னையும் செய்யுங்கள் என்று அர­சாங்­கத்தைக் கேட்டுக் கொள்­கின்றோம்.
1987 ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்த நான்கு சபை­க­ளையும் ஒன்­றாக்கி ஒரு சபை­யாக மாற்றி அமைத்­த­மையால் நாங்கள் கடந்த 30 வரு­டங்­க­ளாக  பல்­வேறு துன்ப துய­ரங்­க­ளுக்கு மத்­தி­யில்தான் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.
கல்­முனை, முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­தொரு நக­ர­மாகும். இதனை முஸ்­லிம்­களின் தலை­ந­க­ர­மாக்கி அழகு பார்க்க வேண்டும். இதற்கு நாங்கள் பிரிந்து நிற்க முடி­யாது. சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை வழங்­கு­வ­தாக இருந்தால் கல்­மு­னையை நான்­காகப் பிரிக்க வேண்­டு­மென்று நாங்கள் சொல்­லு­வதன் உண்­மைத் தன்­மையை புரிந்துகொள்­ளாத சாய்ந்­த­ம­ருதைச் சேர்ந்த எமது சகோ­தர்­களில் ஒரு குழு­வினர் என்ன நடந்­தாலும் கவ­லை­யில்லை சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை தாருங்கள் என்று போராடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், கல்­மு­னையை நான்­காகப் பிரித்து சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான உள்­ளூராட்சி சபையை வழங்­குங்கள் என்­ப­துதான் எங்­களின் நிலைப்­பா­டாகும்.
தென்­கி­ழக்கு பல்­கலைக்கழ­கத்தின் விரி­வு­ரை­யாளர் எச்.எம்.நிஜாம் உரையாற்றுகையில்,
 நாங்கள் இன்று மேற்­கொண்ட அமை­தி­யான பேரணி எந்தப் பிர­தே­சத்­திற்கும் எதிரானதல்ல. ஆனால், கல்முனையை நான்காக பிரித்து நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்குங்கள் என்றுதான் கேட்கின்றோம். இது எங்கள் மக்களின் கோரிக்கையாகும். இதற்கு மாற்றமாக கல்முனையின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network