மின்சார தட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை!நீண்டகால அடிப்படையிலான மின் உற்பத்தி திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர தவறும் பட்சத்தில் தேசிய பொருளாதாரம் பாரிய அளவில் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கை ஒன்றை மின்வலு மற்றும் மீள் புத்தாக்கல் வலுத்துறை அமைச்சிற்கு சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உரிய காலத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்படாவிடில் அவசர நிலைகளின் போது மின்சாரத்தை கொள்வனவு செய்ய 50 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.